முதியவரை புலி தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ ? உண்மை என்ன முழு விவரம் is viral video of tiger attack in maharashtra true or false
முதியவரை புலி தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ ? உண்மை என்ன முழு விவரம் is viral video of tiger attack in maharashtra true or false
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதியவரை புலி தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது முழுக்க முழுக்க AIயால் உருவாக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது.
பரவும் செய்தி:-
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி வன விருந்தினர் மாளிகையில் புலி ஒன்று மனிதனைத் தாக்கும் சிசிடிவி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன:-
இந்த வீடியோ இணையவாசிகளிடையே பெரும் பீதியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் அக்டோபர் 31, 2025 காலை 6:42 என தேதியைக் குறிக்கும் கேமரா பதிவு காட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவில் ஒரு வயதான முதியவர் நாற்காலியில் அமர்ந்திருக்கின்றார் அப்போது ஒரு புலி அவரை தாக்கி இழுத்துச் செல்கிறது.
இது போல் ஓர் சம்பவம் மகாராஷ்டிராவில் நடக்கவில்லை என்றும் அந்த வீடியோ AI-யால் உருவாக்கப்பட்ட வீடியோ என மகாராஷ்டிரா அரசின் PIB உண்மை சரிபார்ப்பு குழு தனது X இல் ஒரு பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/PIBMumbai/status/1986790839583179124
Tags: FACT CHECK இந்திய செய்திகள் மறுப்பு செய்தி வைரல் வீடியோ
