Breaking News

வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வர புதிய விதிமுறை அமல் - 40 சவரன் வரை நகை எடுத்துவர அனுமதி -முழு விவரம்

அட்மின் மீடியா
0

வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வர புதிய விதிமுறை அமல் - 40 சவரன் வரை நகை எடுத்துவர அனுமதி -முழு விவரம்



வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது சுற்றுலா சென்று திரும்புபவர்கள் இந்தியாவிற்குத் தங்கம் கொண்டு வருவதற்கான விதிகளில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. 

புதிய 'பயணிகள் உடைமை விதிகள் 2026' படி

இதுவரை வெளிநாட்டிலிருந்து தங்கம் கொண்டு வரும்போது அதற்கு குறிப்பிட்ட பண மதிப்பு (உதாரணமாக 1 லட்சம் ரூபாய்) உச்சவரம்பாக இருந்தது. 

தற்போது அந்தப் பண மதிப்பை அரசு நீக்கியுள்ளது. இனிமேல் நிர்ணயிக்கப்பட்ட எடையின் கீழ் எவ்வளவு மதிப்புள்ள தங்கம் இருந்தாலும் அதற்குச் வரி விலக்கு அளிக்கப்படும்.

குறைந்தது ஒரு ஆண்டிற்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும். 

ஆண்களாக இருந்தால் (ரூ.3,00,000 வரை) தலா 20 கிராம், 

பெண்களாக இருந்தால் தலா 40 கிராம் (ரூ.6,00,000 வரை) நகை கொண்டு வர அனுமதித்துள்ளனர். 

ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கிவிட்டு இந்தியா திரும்புவோர் நகை கொண்டு வந்தால் சுங்க வரி இல்லை. 

நீங்கள் கொண்டு வரும் நகைக்கான அசல் ரசீது (Invoice) மற்றும் அதன் தரம் குறித்த சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். 

நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு மேல் தங்கம் கொண்டு வந்தால் அதற்கு இறக்குமதி வரி செலுத்த வேண்டும். 

தற்போது இறக்குமதி வரி 6%, அதனுடன் செஸ் (Cess) மற்றும் ஜி.எஸ்.டி சேர்த்தால் மொத்தமாக சுமார் 9% வரி செலுத்த வேண்டியிருக்கும். 

மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாகத் திருமண விசேஷங்களுக்கு நகை கொண்டு வருவோருக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback