Breaking News

4 மாவட்ட முழு ஊரடங்கு அறிவிப்பு - என்னென்ன இயங்கும்...? என்னென்ன இயங்காது...?முழு விவரம்

அட்மின் மீடியா
0
19.6.2020 ம் தேதி அதிகாலை 12 மணி முதல் 30.6.2020ம் தேதி  இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது



செயல்படகூடியது

மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது


அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை


உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி


வங்கிகள் 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். 


ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொது விநியோகக் கடைகள் இயங்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில்வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் அக்கடைப் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்


அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community Kitchens) தொடர்ந்து செயல்படும்.


திருமணம், இறப்பு, மருத்துவ காரணங்களுக்காக இ-பாஸ் விநியோகிக்கப்படும்


அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வாகனங்களைப் பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ. தொலைவிற்குள் மட்டும் சென்று, பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.


மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்.


பொதுமக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.









அனுமதி இல்லை


ஊரடங்கின் போது ஆட்டோ, டாக்ஸிகளை இயக்க தடை விதிப்பு


முழு ஊரடங்கில் தேனீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback