கலைஞரின் கனவு இல்லம் விண்ணப்பிப்பது எப்படி ஸ்டெப் பை ஸ்டெப் முழு விவரம் apply online 2026
கலைஞரின் கனவு இல்லம் விண்ணப்பிப்பது எப்படி ஸ்டெப் பை ஸ்டெப் முழு விவரம் apply online 2026
கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது
2030-க்குள் குடிசையற்ற தமிழகத்தை உருவாக்க, தமிழ்நாடு அரசு ரூ. 3.5 லட்சம் நிதியுதவியுடன், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2026-ல் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணியை மேற்கொள்கிறது. 2026-ம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தின் கீழ், குடிசை வீடுகளை அகற்றி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வசிக்கும் நீங்கள் புதிதாக வீடுகட்ட திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்பவராக இருந்தால், இப்போது இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
நிதி உதவி:-
இந்த திட்டம் மூலமாக கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு ரூ.3,50,000 மானியத்தில் ஆர்சிசி கூரையுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ரூ.3.10 லட்சம் நிதியாகவும், மீதமுள்ள ரூ.40,000 மதிப்பில் சிமெண்ட் மற்றும் இரும்புக் கம்பி போன்ற கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பயனாளர்கள் விரும்பினால், வீடுகளுக்கான கட்டுமான பணிகள், கட்டுமான பொருட்கள் மற்றும் தேவையான வசதிகளுக்கு ரூ.1,50,000 வரை கடனும் வங்கிகள் மூலம் பெறலாம்.
நிபந்தனை:-
சொந்தமாக நிலம் இருக்க வேண்டும், குடிசை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:-
கிராம ஊராட்சி அலுவலகங்களில் அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, நில ஆவணங்கள் மற்றும் வருமானச் சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் (ஊராட்சித் தலைவர்/ஊராட்சிச் செயலர்) மூலம் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் சரிபார்ப்பிற்குப் பிறகு, அரசு அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்கள் முன்னுரிமை மற்றும் அரசு விதிமுறைகளின் அடிப்படையில் பட்டியலிடப்படுவார்கள்.
அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நிதி படிப்படியாக விடுவிக்கப்பட்டு, அரசாங்க மேற்பார்வையின் கீழ் வீடு கட்டும் பணிகள் தொடங்கும்..
தேவையான ஆவணங்கள்:-
ஆதார் அட்டை.
வருமானச் சான்றிதழ்
நிலப் பத்திரம்
வாக்காளர் அடையாள அட்டை.
வங்கி கணக்கு புத்தகம்
பாஸ்போட் சைஸ் போட்டோ
பட்டா & சிட்டா- போன்ற ஆவணங்களை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு
அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்தை (Block Development Office) அணுகவும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள் :-
அரசு ஊழியராகவோ அல்லது ஓய்வுபெற்ற அரசு ஊழியராகவோ இருந்தால் விண்ணப்பிக்க தகுதியில்லை
ஏற்கனவே சொந்தமாக ஆர்.சி.சி (RCC) கான்கிரீட் கூரை வீடு வைத்திருப்பவர்கள்.
சொந்தமாக நிலம்/மனை இல்லாதவர்கள்.
புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
ஏற்கனவே மத்திய அல்லது மாநில அரசின் வீட்டு வசதித் திட்டங்களில் அதாவது PMAY, ஊரக வீட்டு வசதித் திட்டங்களின் மூலம் வீடு கட்ட நிதியுதவி பெற்றவர்கள்
Tags: தமிழக செய்திகள்
