தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கப்போவது யார்? வெளியான கருத்துக்கணிப்பு- விஜய் கட்சிக்கு எத்தனை இடங்கள் முழு விவரம் EXIT POLL 2026
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கப்போவது யார்? வெளியான கருத்துக்கணிப்பு- விஜய் கட்சிக்கு எத்தனை இடங்கள் முழு விவரம் EXIT POLL 2026
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது
தமிழ்நாட்டி்ல 234 தொகுதிகள் உள்ள நிலையில், 118 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியும். இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளது.
வெளியாகி உள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் திமுக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது என்றும் எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக உட்காருகிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20 இடங்களுக்கும் குறைவாகவே கொடுத்துள்ளனர்
மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு :-
திமுக கூட்டணி 122-132 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 87-110 இடங்களைப் பிடிக்கும் எனத் கணிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தவெக 10-12 இடங்களை மட்டுமே பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பிற கட்சிகள் 0-6 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக்- பி மார்க் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு:-
திமுக கூட்டணி 125-145, இடங்கள்
அதிமுக கூட்டணி 65-85 இடங்கள்
தவெக 16-26 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு:-
திமுக 145-160 இடங்களிலும்,
அதிமுக 50-65 இடங்களிலும்,
தவெக 13-18 இடங்களிலும்,
பிற கட்சிகள் 5-8 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு
\திமுக 125-145 இடங்களிலும்,
அதிமுக 65-80 இடங்களிலும்,
தவெக 18-24 இடங்களிலும்,
பிற கட்சிகள் 2-6 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDTV கருத்துக்கணிப்பு.
திமுக கூட்டணிக்கு 125-145 தொகுதிகளும்,
அதிமுக கூட்டணிக்கு 65-80 தொகுதிகளும்,
தவெகவுக்கு 18-24 தொகுதிகளும்,
மற்றவை 2-6 தொகுதிகளும் கிடைக்கும்
JVC TIMES NOW நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு
அதிமுக கூட்டணி 128- 147 இடங்களிலும்,
திமுக கூட்டணி 75- 95 இடங்களிலும்,
தவெக 8-15 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
CNN- NEWS 18 கருத்துக்கணிப்பு
திமுக கூட்டணி 101-113 இடங்களிலும்,
அதிமுக கூட்டணி 114- 124 இடங்களைப் பிடிக்கும் எனத் கணிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தவெக 4-10 இடங்களை மட்டுமே பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பு
புதுச்சேரியில் ரங்கசாமி கூட்டணி 16 முதல் 20 இடங்களையும்
காங்கிரஸ் கூட்டணி ஆறு முதல் எட்டு இடங்களையும்
விஜய் தமிழக வெற்றி கழகம் இரண்டு முதல் நான்கு இடங்களையும் பிடிக்கும் என வெளியிட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
