Breaking News

பூமியில் இருந்து நிலாவை பார்க்கின்றோம் ஆனால் நிலாவில் இருந்து பூமி எப்படி இருக்கும் வீடியோ வெளியிட்ட நாசா

அட்மின் மீடியா
0

நாசாவின் ஆர்டெமிஸ் (Artemis) திட்டம் நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அழைத்துச் செல்லும் ஒரு முக்கிய விண்வெளி பயணமாகும். 2022-ல் ஆர்டெமிஸ் I வெற்றிகரமாக முடிந்தது, ஏப்ரல் 2026-ல் ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்களுடன் நிலவைச் சுற்றி வருகிறது. 



அமெரிக்காவில் உள்ள தேசிய வானூர்தி விண்வெளி நிலையம் (நாசா), கடைசியாக 1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பியிருந்தது.அதன்பின்னர், 53 ஆண்டுகளாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஆர்டெமிஸ் -2 என்ற திட்டத்தின்கீழ் ஓரியன் விண்கலம் மூலம் 4 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுக்கு அனுப்பியது.

இந்த திட்டம் நிலவில் நிலையான மனித குடியிருப்பையும், செவ்வாய் கிரக பயணத்திற்கான அடித்தளத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

இந்நிலையில் ஆர்டெமிஸ் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்தபோது இதுவரை யாரும் கண்டிராத காட்சியை படம்பிடித்த ஆர்டெமிஸ் குழுவினர்; நிலவுக்கு பின்னால் சூரியன் சென்றதால் முழுமையாக இருளாக காட்சியளித்த பகுதி(ஏப்.6) படம் பிடித்துள்ளனர்

இந்த பயணத்தின் போது, முதல்முறையாக நிலவின் பின்புறத்தை நேரடியாக வீரர்கள் கண்டனர். இதுவரை நிலவின் பின்புறத்தை செயற்கைக்கோள் புகைப்படம் மூலமே கண்டுள்ளனர்.இந்த நிலையில், இன்று அதிகாலை நிலவுக்கு மிக அருகில், பூமியிலிருந்து அதிக தொலைவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

நிலாவை சுற்றி பயணம் செய்து கொண்டிருக்கும் ஆர்டெமிஸ் குழுவினருக்கும், பூமிக்கும் இடையிலான தொடர்பு ஒரு சில நிமிடங்களுக்கு தூண்டிக்கப் பட்டு இருந்தது

இந்திய நேரப்படி, ஏப்ரல் 7 காலை 4 மணி அளவில், ஓரியன் விண்கலம் நிலாவின் பின்புறம் செல்லும் போது, விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையிலான ரேடியோவும் லேசர் சிக்னல்களும் முழுக்க தடைபடும்.சுமார் 40 நிமிடங்களுக்கு, அந்த 4 விண்வெளி வீரர்களும் பூமியுடன் எந்த தொடர்பும் இல்லாமல் விண்வெளியில் தனியாக இருந்துள்ளனர்

Artemis II astronauts captured these views of the Moon as the Orion spacecraft flew around the far side of the Moon on April 6, 2026.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/NASA/status/2041690396586090592

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/ProfIsaPantami/status/2041348977824534792

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback