ரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட ஊழியர் வைரல் வீடியோ
ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை நொடியில் மீட்ட ஊழியர்
நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் படுத்து கிடந்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை ரயில்வே கி மேன் ஆறுதல் சொல்லி மீட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே ரயில்வே கீ மேன் மீனாட்சி சுந்தரம் இன்று காலை 6:00 மணிக்கு தண்டவாளத்தில் நடந்து சென்று தனது பணியை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்பொழுது ரயில்வே தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் தலையை வைத்து படுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் இருந்திருக்கிறார். இதைப் பார்த்த மீனாட்சி சுந்தரம் உடனடியாக முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி என்ன பிரச்சனை எதற்காக இதுபோன்று தற்கொலைக்கு முயல்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்.
அந்த நேரத்தில் நெல்லை மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் எனது பெயர் மகன் என்னை தாக்கியதால் மன வேதனையில் இது போன்ற தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக அந்த முதியவர் கூறி இருக்கிறார்.
ரயில்வே கீ மேன் மீனாட்சி சுந்தரம் தற்கொலை செய்து கொள்வது தீர்வல்ல என்பது குறித்து எல்லாம் அறிவுரை கூறி முதியவரை மீட்டு அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறார். காலையிலேயே தண்டவாளத்தில் ஆய்வு பணிக்குச் சென்ற ரயில்வே கி மேன் தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட சம்பவம் நெல்லையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/2048561071255064791
Tags: தமிழக செய்திகள்
