Breaking News

RTE தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

2026-27 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு


quarterly exam holiday will be extended in Tamil Nadu

தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) -இன் கீழ் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.

பள்ளிகளில் RTE எனப்படும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்

சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in. என்ற இணையதளத்தில் 20.04.2026 முதல் 18.05.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

அதேபோல 20.4.2026 முதல் 18.05.2026 வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் /மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்)/ மாவட்டக் கல்வி அலுவலர் /வட்டாரக் கல்வி அலுவலர் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தேவையான ஆவணம்:-

1. பிறப்புச் சான்றிதழ்.

2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்.

3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்.

4. நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்.

5. இருப்பிடச்சான்று,

மேலும், முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர்/ வட்டாரக் கல்வி அலுவலர்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 10-ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை கணக்கிட்டு அதன் விவரங்களை எமிஸ் தளம் மற்றும் பள்ளியின் முகப்பு வாயிலில் பலகையாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

tamilnadu rte school admission

TN RTE Admission 2026

RTE Tamilnadu Admission 2026 Online Registration

RTE Tamil Nadu Admission 2025-26 Apply Online

rte tamilnadu

rte tamilnadu admission 2025-26

rte tnschools

rte tnschools gov in online application 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback