Breaking News

பான்கார்டு விண்ணப்பிக்க இனி கூடுதல் ஆவணங்கள் கட்டாயம் New PAN card rules April 2026

அட்மின் மீடியா
0

வருமான வரித் துறையால் வழங்கப்படும் பான் கார்டு விண்ணப்ப முறைகளில், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. 

இதுவரை ஆதார் அட்டையை மட்டுமே வைத்து எளிதாக பான் கார்டு பெற்று வந்த நிலையில், இனி கூடுதல் ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன

தற்போது ஆதார் அட்டையை மட்டுமே ஆவணமாகக் கொண்டு பான் கார்டு பெற்று வந்த 'எளிமையான முறை' மார்ச் 31-டன் முடிவுக்கு வருகிறது. சிஎஸ்சி (CSC e-Governance Services India Limited) அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, புதிய பான் கார்டு கோருபவர்கள் அல்லது திருத்தங்கள் செய்பவர்கள் இனி கூடுதலாகப் பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback