Breaking News

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு சிறையில் இருந்த பேரறிவாளன் வழக்கறிஞர் ஆனார் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு சிறையில் இருந்த பேரறிவாளன் வழக்கறிஞர் ஆனார் முழு விவரம்



சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 1250 சட்டப்படிப்பு முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர். இதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேரறிவாளனும் ஒருவர். 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் அவர் முறைப்படி வழக்கறிஞராகப் (Advocate) பதிவு செய்துகொண்டார்.

1991ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக அவர் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் 31 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு, பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்பட்டது.



விடுதலைக்குப் பிறகு, தனது வாழ்க்கையை புதிய பாதையில் கொண்டு செல்லும் முயற்சியாக பேரறிவாளன் சட்டத் துறையைத் தேர்ந்தெடுத்தார். 

விடுதலைக்குப் பிறகு தனது சட்டப் படிப்பை முழுமையாக முடித்து, தற்போது மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞராக மாறியுள்ளார்.

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாது. இதுசம்பந்தமாக காவல் துறையிடம் ஆட்சேபனையில்லா சான்று பெறப்படும். பேரறிவாளனுக்கு எதிராக ராஜிவ் கொலை வழக்கு மட்டும் இருந்தது. இந்த வழக்கில், அவர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதால், அவர் வழக்கறிஞராக பதிவு செய்ய ஆட்சேபமில்லா சான்று காவல் துறை தரப்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback