உயிரிழந்த தாய்க்காக ரூ. 5 கோடியில் திருவாரூரில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம், மசூதி, மற்றும் மதரஸா கட்டிய பாச மகன் அம்ருதீன் ஷேக் தாவுது
திருவாரூரில் மறைந்த தாயின் நினைவாக 5 கோடி ரூபாய் மதிப்பில் மகன் ஒருவர் தாஜ்மஹால் போன்ற நினைவிடத்தை கட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாகக் கொண்ட அப்துல் காதர்- ஜெய்லானி பீவி தம்பதியினருக்கு நான்கு மகள் ஒரு மகன். அப்துல் காதர் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூதிற்கு பதினொரு வயது இருக்கும் பொழுது அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ஜெய்லானி பீவி அந்த கடையை நிர்வகித்து வந்ததுடன் தனது மகன், மகள்கள் ஆகியோரை நன்கு படிக்க வைத்து கரை சேர்த்துள்ளார். இதில் அம்ருதீன் ஷேக் தாவுது பி.ஏ முடித்து விட்டு தற்போது சென்னையில் சென்னையில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இறந்த தனது தாய்க்கு தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டலாம் என்று முடிவெடுத்து ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டு 2 ஆண்டுகளில் ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லத்தைக் கட்டியுள்ளார். இங்கு ஜெய்லானி பீவியின் சமாதி
இங்கு ஜெய்லானி பீவியின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்துக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி திறப்புவிழா நடைபெற்று, பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. மதங்களை கடந்து அன்பை நேசிக்கும் அனைவரும் இந்த நினைவு இல்லத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இங்கு 5 வேளை தொழுகை நடத்திக்கொள்ளும் வகையில் பள்ளிவாசலும் மார்க்க கல்வி கற்க மதரஸாவும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தாஜ்மஹால் வடிவ நினைவு இல்லத்தை நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வந்து தினந்தோறும் பார்த்து செல்கின்றனர்.
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி வைரல் வீடியோ