Breaking News

ஈரானிய தலைவரின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்த ஜெனரல் தற்கொலை என பரவும் வீடியோ உண்மை என்ன ali khamenei death fake news

அட்மின் மீடியா
0
The general who betrayed the Iranian leader by revealing his exact location has repented. He took his own life on live broadcast. Sensitive video.


பரவும் செய்தி:-

ஈரானிய தலைவரின் சரியான இருப்பிடத்தை வெளிப்படுத்தி அவரைக் காட்டிக் கொடுத்த ஜெனரல் மனந்திரும்பிவிட்டார். நேரடி ஒளிபரப்பில் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். உணர்ச்சிகரமான காணொளி. என சமூக வலைதளங்களில் ஓர் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

உண்மை என்ன:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில், ஒரு நபர் இஸ்லாமிய நம்பிக்கையின் சாட்சியத்தை ஓதிக் கைத்துப்பாக்கியை தனது , தலையில் வைத்து தன்னைத்தானே சுட்டுக்கொள்கின்றார்.

அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து ஈரான் நாட்டின் உச்ச தலைவரான ஆயத்துல்லா அலி கமேனியை தனது சரியான இருப்பிடத்தை வெளிப்படுத்தி துரோகம் செய்ததாகக் கூறப்படும் ஒரு இராணுவ ஜெனரல் பின்னர் "மனந்திரும்பி" நேரடி ஒளிபரப்பின் போது தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது உண்மையில்லை

மேலும் கமேனியின் மரணம் தொடர்பாக எந்தவொரு உயர் அதிகாரியும் அத்தகைய செயலைச் செய்ததாக எந்த அதிகாரப்பூர்வ ஈரானிய அறிக்கையோ, இராணுவப் பதிவோ அல்லது நம்பகமான சர்வதேச அறிக்கையோ இதுவரை வரவில்லை

ஈரானின் உச்ச தலைவர் கமேனி அவர்கள் 28.02.2026 அன்று அமெரிக்க இஸ்ரேல் ரானூவத்தால் படுகொலை செய்யப்பட்டர்.

ஆனால் அந்த ஆனால் இந்த வீடியோ கமேனி இறப்பதற்க்கு 2 ஆண்டுகள் முன்பே சமூகவலைதளங்களில் பரவி உள்ளது. 

அந்த வீடியோ 15.1.2024 அன்று  கிழக்கு குர்திஸ்தானில் உள்ள Baneh நகரத்தைச் சேர்ந்த எர்பிலில் வசிக்கும் ஜாஹிர் அமினி என்பவர் இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்துகொண்டார். 

அந்த வீடியோவை எடுத்து ஈரானின் உச்ச தலைவர் கமேனி அவர்கள் படுகொலையுடன் தொடர்பு படுத்தி பொய்யாக காரணம் காட்டி பலரும் ஷேர் செய்துவருகின்றார்கள்

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/NewsRojhelat/status/1846172430038938023

Tags: FACT CHECK மறுப்பு செய்தி மார்க்க செய்திகள்

Give Us Your Feedback