Breaking News

50 போர் விமானங்கள், 100 குண்டுகள் வீசி கொல்லப்பட்ட காமேனி - வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்

அட்மின் மீடியா
0

50 போர் விமானங்கள், 100 குண்டுகள் வீசி கொல்லப்பட்ட காமேனி - வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் 

ஈரான் சுப்ரீம் லீடர் கமேனியை கொல்வதற்கு 50 போர் விமானங்களை பயன்படுத்தி தாக்கி அழித்த video வை, Israel வெளியிட்டிருக்கிறது இஸ்ரேல்



கமேனி தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியை அழித்ததன் வீடியோ வெளியீடு

சுமார் 50 இஸ்ரேலிய போர் வானூர்திகள் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதாகப தெரிவிக்கப்படுகின்றது. 

தெஹ்ரானின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தடி வளாகத்தின் மீது சுமார் 100 குண்டுகள் வீசப்பட்டு அவை முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஈரானும் ஆவேசமாக பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி அசரடித்து வரும் அந்த நாடு. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகிறது.

இந்தநிலையில், ஈரான் உயர் தலைவர் காமேனி தெஹ்ரானில் நிலத்துக்கு அடியில் பதுங்கியிருந்த இடத்தை தகர்த்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. 

அந்த பதிவில்,சிங்கத்தின் கர்ஜனை ஆபரேஷனில் 50 ஜெட் விமானங்கள் ஈடுபட்டன. காமேனியின் இல்லம், அலுவலகம் தகர்க்கப்பட்ட செயற்கைக்கோள் காட்சிகள் அதில் வெளியிடப்பட்டுள்ளது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/IDF/status/2029878769142358298

ஈரான் உயர் தலைவர் காமேனி கொல்லப்பட்டது தொடர்பான வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம் காமேனியின் இல்லம், அலுவலகம் தகர்க்கப்பட்ட செயற்கைக்கோள் காட்சிகள் வெளியீடு

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback