மாதம் ₹2500, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்,அனைத்து பேருந்திலும் இலவச பயணம் - த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அறிவித்த விஜய்..!
அட்மின் மீடியா
0
த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
நாளை (08-03-2026) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (07-03-2026) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செலாளர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பதாக கூறப்பட்டது. இந்த விழாவின்போது இஸ்ரோ பெண் விஞ்ஞானி கல்பனா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய், சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசாக கொடுத்து, கை கடிகாரங்கள் அணிவித்து கெளரவித்தார்
1. பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனி இலாகா உருவாக்கப்படும்
2. மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும்
(நிபந்தனை: 60 வயது வரையிலான பெண்களுக்கு உரிமை தொகை; மத்திய, மாநில ஊழியர்களுக்கு விலக்கு)
3. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: கட்டணமின்றி வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள்
4. அண்ணன் சீர் திட்டம்: 1 சவரன் தங்கம், 1 பட்டு சேலை
5. காமராஜர் கல்வி உறுதித் திட்டம்: 1 முதல் +2 வரை பயிலும் மாணாக்கர்களின் தாய்(அ) பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித்தொகை
6. வெற்றிப் பயணத் திட்டம்: அரசு போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்
7. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக "ராணி வேலுநாச்சியார் படை" உருவாக்கப்படும்
8. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்
9. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart Panic Button பொருத்தப்படும்
10. ரேசன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும்
11.சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100% மானியத்தில் வழங்கப்படும்
12. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்