Breaking News

மே 1 முதல் அமலுக்கு வரவுள்ள மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

மே 1 முதல் அமலுக்கு வரவுள்ள மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம்





சிலிண்டர் புக்கிங் விதிகளில் மாற்றம்

நகரங்களில் 25 நாட்களுக்கு ஒரு முறையும் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும் என்கிற விதி இருந்து வருகிறது. அதேபோல் சிலிண்டர் சப்ளையில் வெளிப்படை தன்மையை கொண்டு வர OTP அடிப்படையிலான டெலிவரி முறை 100% கட்டாயப்படுத்தப்பட உள்ளது. 

எஸ்பிஐ கிரெடிக் கார்டுகள் தாமதக் கட்டணம்

எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மே 1 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. எஸ்பிஐ வங்கி இதற்கு முன்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.500 வரை நிலுவைத் தொகைக்கு தாமத கட்டணம் வசூலிக்காமல் இருந்து வந்தது. ஆனால் இனி ரூ.100-க்கு மேல் ரூ.500 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு ரூ.100 தாமதக் கட்டணம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. 

HDFC வங்கி எஸ்எம்எஸ் கட்டணம்

HDFC வங்கி தனது எஸ்எம்எஸ் சேவைகளுக்கான புதிய கட்டணங்களை மே ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வங்கி பரிவர்த்தனைகளின் பொழுது பாதுகாப்பு கருதி நம் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது ஒரு குறுஞ்செய்திக்கு 20 காசுகளுடன் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் மே 1 முதல் ஒரு எஸ்எம்எஸ்-க்கு 15 காசுகளாக குறைக்கப்பட உள்ளது. 

ஆன்லைன் விளையாட்டுகளுக்கான புதிய விதிகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கான புதிய விதிகள்ஆன்லைன் விளையாட்டு தொடர்பான புதிய விதிமுறைகளை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

சூதாட்டம் இல்லாத சாதாரண விளையாட்டுகளுக்கு பதிவு அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

EPFO விதிகளில் புதிய மாற்றம்

தொழிலாளர் வருங்கால பைப்பு நிதி நிறுவனமான EPFO மே மாதம் முதல் புதிய நடைமுறைகளை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PF பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்து மாத கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பணத்தை UPI அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி EPFO 3.O மூலம் கொண்டு வரப்படும் என்று சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நடைமுறை வரும் மே மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 1-ம் தேதி முதல் உதகை செல்ல கட்டுப்பாடுகள் 

மே 1ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் வாகனங்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பால், பெட்ரோல் மற்றும் (LPG ) எரிவாயு சமையல் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback