Breaking News

12 நாள் முழு ஊரடங்கில் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தத் தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு: தமிழக அரசு

அட்மின் மீடியா
0
ஜூன் 19-ம் தேதி வரும் வெள்ளிகிழமையில் இருந்து ஜூன் 30-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.




இந்த முழு ஊரடங்கில்  2 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன 21.06.2020 அன்றும் 28.06.2020 அன்றும்  எந்த வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

என்றும் அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும்

இந்த 2 நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.











அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback