8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு TN Highways Department Recruitment 2025
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் TN Highways Department Recruitment 2025
பணி:-
அலுவலக உதவியாளர் (Office Assistant),
ஓட்டுநர் (Driver),
அலுவலக காவலர் (Office Watchman),
மற்றும் காவலர் (Watchman)
கல்வித் தகுதி:-
அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன்,மிதிவண்டி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் (Driver) பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக காவலர் (Office Watchman) பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர் (Watchman) பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html
எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html
வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html
SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html
வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html
குறிப்பு:-
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்குவிண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தனித்தாளில் தங்கள் பெயர், பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, சாதி, மற்றும் இருப்பிடம் போன்ற சுயவிவரங்களைக் குறிப்பிட்டு இருப்பிடச்சான்றிதழ் மற்றும் 2-அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களிடமிருந்து நாளது தேதியில் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றுகளுடன் இணைத்து மேற்குறித்த பதவிகளுக்கு தனித்தனியேய பதிவின் பெயரினைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கென தனியாக விண்ணப்பங்களோ/ படிவங்களோ அங்கீகரிக்கப்படவில்லை. உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
கீழே அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்படுள்ள அந்தெந்த மாவட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை நேரிலோ (or) தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். காலதாமதமாகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், இடம் ஆகியவை குறித்த விவரங்கள் தனியே கடிதம் மூலமாக (call letter) தெரிவிக்கப்படும்.பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்திகரமான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
Thanjavur மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 17.11.2025
Vellore மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 17.11.2025
Cuddalore மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 15.11.2025
Tirupur மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 19.11.2025
Chengalpattu மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 23.11.2025
Tenkasi மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 17.11.2025
Covai மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 26.11.2025
Trichy மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20.11.2025
Thoothukudi மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 17.11.2025
Nagercoil மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 14.11.2025
மேலும் விவரங்களுக்கு
TN Highways Department Recruitment நாகர்கோவில் மாவட்டம் அறிவிக்கை

Tags: வேலைவாய்ப்பு










