Breaking News

SIR வாக்காளர் படிவத்துடன் எந்த ஆவணமும் இணைக்க தேவையில்லை தேர்தல் ஆணையம் வெளிட்ட அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

SIR.. எந்த ஆவணமும் இணைக்க தேவையில்லை.. வாக்காளர்களுக்கு கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முறை-2026 கடந்த 4-ந்தேதி தொடங்கிய கணக்கெடுப்புப் பணி டிசம்பர் மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும். 

அப்போது பிஎல்ஓ அதிகாரி உங்களிடம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் இரண்டு பிரதிகளை உங்கள் வீட்டிற்கே வந்து வழங்குவார்.

அதன் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கொடுக்கும் வாக்காளர் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் 

பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் திரும்ப வழங்கிடும் போது எந்தவொரு ஆவணங்களையும் நீங்கள் இணைக்க வேண்டியதில்லை. பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி வெளியிடப்படும் 

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்,புதிதாக மீண்டும் டிசம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் 7.02.2026 அன்று வெளியிடப்படும். 

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html

வாக்குச்சாவடி நிலை அலுவலர் என்ன செய்வார்?

  • 04.11.2025 முதல் 04.12.2025 வரை உங்கள் வீட்டுக்கு 3 முறை வருகை புரிவார்
  • பகுதியளவு முன் நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தின் இரண்டு பிரதிகளை உங்களிடம் வழங்குவார்
  • படிவத்தை நிரப்புவதற்கு உதவுவார்
  • நீங்கள் நிரப்பிய கணக்கெடுப்பு படிவத்தை சேகரித்து, அதன் ஒரு நகலில் படிவத்தை பெற்று கொண்டதற்கான ஒப்புகை வழங்குவார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback