Breaking News

அன்பான அட்மின் மீடியாவின் வாசகர்களே உங்களுடன் சில நிமிடங்கள்...

அட்மின் மீடியா
0
அன்பான அட்மின் மீடியாவின் வாசகர்களே உங்களுடன் சில நிமிடங்கள்...நாம் அனைவரும் வாட்ஸப்,பேஸ்புக்,யூடியூப்,இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற பல சமூகவலைதளங்களில் இருக்கின்றோம்நாம் அதில்  பல விதமான  தகவல்களை தெரிந்துக் கொள்கிறோம்  மற்றவர்களுக்கும் பகிர்கிறோம் ஆனால் நாம் பகிரும் தகவல்கள் உண்மையானதா? அல்லது  பொய்யானதா? என்று எப்பொழுதாவது சிந்தித்துப்  பார்த்திருக்கிறோமா? அல்லது அந்த தகவல் அவர்களுக்கு   பயனுள்ளதாக இருக்குமா  என்றாவது யோசித்து இருக்கிறோமா?

நாம் நமக்கு கிடைத்த தகவல்களை அது உண்மைதானா அல்லது  பொய்யானதா  என்பதை ஆராயாமல் பகிர்வதால்  சமுதாயத்தில் எவ்வளவு  பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறோம்  என்று நினைத்திருக்கிறீர்களா? அது எவ்வளவு பெரிய பாவம் என்று உங்களுக்குத் தெரியுமா?

நாம் உண்மை என்ன தெரியாமல் இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) நூல்: முஸ்லிம்

நம்முடைய இறைவன் கூறுகிறான் 

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

நம்முடைய இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 6

எனவே இனி நாம் ஒரு தகவலை ஷேர் செய்ய  நாடினால் அந்த தகவல் உண்மையானதா அல்லது பொய்யானதா மற்றவர்களுக்கு  பயன் தருமா என்பதை சிந்தித்து பகிர்வோம்.

உங்களுக்கு ஒரு தகவல்உண்மையா அல்லது பொய்யா என்று தெரியவில்லை என்றால் நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். நாங்கள் அந்த தகவல்களை உண்மை அல்லது பொய் என்று தெரியப்படுத்துகிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் பொழுது சமுதாயத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான வதந்திகள் குழப்பங்களை தடுக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் மக்கள் சேவையில் அட்மின் மீடியா. 

இந்த ரமலான் மாதத்தில் இதுவரை சமூக வலைதளங்களில் பரவிய பொய்யான செய்திகள் பட்டியல்....


உ.பியில் பசுவை தாக்கியதற்காக போலிசாரால் தாக்கப்பட்டாரா?செல்லமுத்து சர்பத் சம்பந்தமாக பரவும் செய்தி


மானை சுட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ அனில் உபாத்யா


ரமலானுக்கு அரசு இலவச பொருட்கள் தருகின்றதா?? Dont miss this Government Ramadan Relief Package 2022 என பரவும் செய்தியின் உண்மை என்ன!!!கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைகுறைவு மருந்து கலந்த விற்பனை


பாகிஸ்தானில் மதம் மாற சொல்லி கரண்ட் ஷாக் கொடுத்தார்களா?


வெயில் காரணமக பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்பினால் வெடிக்கும்


அபுதாபி கலிஃபா பல்கலைக்கழகத்தில் இலவச படிப்பு என்ற செய்தி உண்மையா?கிணறு தோண்டும் போது தண்ணீர் வெளியேறி 5 பேர் இறந்தார்கள்ஏழை பெண்களின் திருமணத்துக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி லாட்லி அறக்கட்டளை பெயரில் பரவும் செய்தியின் உண்மை என்ன?உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி ஏற்றி வந்ததாகக் கூறி....பரவும் வீடியோ உண்மை என்ன?


லூலு சூப்பர் மார்க்கெட் ரம்ஜான் கிப்ட் என பரவும் செய்தி- உண்மை என்ன?


மெக்காவில் கண் பார்வையற்ற ஒருவர் தொழுது முடித்ததும் கண் பார்வை கிடைத்தது என பரவும் வீடியோவின் உண்மை என்ன?

Tags: FACT CHECK தமிழக செய்திகள்

Give Us Your Feedback