Breaking News

FACT CHECK ; அபுதாபி கலிஃபா பல்கலைக்கழகத்தில் இலவச படிப்பு என்ற செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் அபுதாபி மருத்துவக்கல்லூரியில் இலவச  இடம்  மற்றும்  படிப்பு இஸ்லாமிய  சமுதாயமே பயன்  படுத்திகொள்ளுங்கள் என்று ஒரு செய்தியை சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இந்த செய்தி கடந்த 2 வருடமாக வலம் வரும் பொய்யான செய்தியாகும், 

பலரும் உண்மை என்றே ஷேர் செய்து வருகின்றார்கள் ஆனால் அந்த செய்தி பொய்யானது ஆகும்

முதலில் நாம் இலவச படிப்பு என்றால் என்ன? ஸ்காலர்ஷிப் படிப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இலவசம் என்றால் கல்லூரியில் சேர்ந்தால் போதும் அனைத்தும் இலவசமாக செய்துக் கொடுக்கப்படும். கல்வி கட்டணம், டியூசன் கட்டணம்,புக், நோட்டு , தேர்வு கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், உணவு கட்டணம் என அனைத்தும் வரும் ஆனால் 

ஸ்காலர்ஷிப் என்பது கல்லூரியில் சேரும் போது அனைத்திற்க்கும் கட்டணம் செலுத்த வேண்டும். பின்பு நமக்கு ஸ்காலர்ஷிப்பிற்கான  தகுதி இருந்தால் அதற்காக தனியாக பணம் தருவார்கள்.அதிலும் கல்விகட்டணம் மட்டும் தான் ஸ்காலர்சிப்பில் வரும் மற்ற கட்டணங்கள் புக், நோட்டு , தேர்வு கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், உணவு கட்டணம், என அனைத்தும் நம் செலவு தான்

அபுதாபியில் உள்ள கலிஃபா  பல்கலைக்கழகம் கடந்த 2007 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டது ஆகும் ஆனால் மருத்துவ படிப்பு 2018 ம் ஆண்டு தான் ஆரம்பிக்கபட்டது

மேலும் அங்கு மருத்துவக்கல்லூரிமட்டுமல்லாமல் அனைத்து படிப்புகளுமே உள்ளது , அதாவது கலைகல்லூரி, தொழில்னுட்ப கல்லூரி, என நைத்தும் உள்ளது  அனைவருக்குமே அங்கு  கட்டண படிப்புத்தான் இலவச படிப்பு அல்ல.



ஆனால் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கபடுகின்றது அந்த ஸ்காலர்ஷிப் 25%,50%,75,மற்றும் 100% வரை வழங்கப்படுகின்றது  என்பது உண்மை

அந்த ஸ்காலர்ஷிப் யாருக்கு வழங்கப்படும்  மற்றும் ஸ்காலர் ஷிப் வகைகள்


Khalifa University Scholarship

ADNOC Scholarship  Program

Telecommunication Regulatory Authority (TRA) Scholarship "Betha"

UAE Nuclear Energy Scholarship Program (ENEC & FANR)

National Electronic Security Authority (NESA) - Tamayuz Scholarship Program

The Future Teachers scholarship

Buhooth Scholarships

KU MED Scholarships

அமீரக குடியுரிமை பெற்ற மக்களுக்கும் அமீரக குடியுரிமை பெறாத மக்கள் என அனைவருக்கும் அங்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகின்றது என்பதுதான் உண்மை,

ஆனால் இலவச படிப்பு என்பது பொய்யான செய்தியாகும் 

மேலும் அவர்கள் MBBS இலவச படிப்பு என்பதை மறுக்கின்றார்கள்,

சில நல்லவர்கள் கலிபா யூனிவர்சிட்டியில் மருத்துவ படிப்பு இலவசம் என்று ஷேர் செய்கின்றார்கள் மேலும் 

நீங்கள் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படிக்கவும் இந்தியாவில் நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும் என்பது குறிப்பிடதக்கது

மேலும் பலரும் ஷேர் செய்யும அந்த முதல் பேட்ச் மாணவர்களுக்கு  இலவச படிப்பு என்பது உண்மையா?

அந்த அறிவிப்பு கடந்த 2018 ம் ஆண்டு மருத்துவகல்லூரி துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது அதுவும் அனைவருக்கும் இல்லை அமீரக வாசிகளுக்கு மட்டும்

எனவே யாரும் எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மைத் தன்மை தெரியாமல் ஃபார்வேர்ட் செய்ய வேண்டாம்.

அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்

2018 ம் ஆண்டு அறிவிக்கபட்ட அறிவிப்பு 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

#Khalifa University

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback