Breaking News

FACT CHECK மெக்காவில் கண் பார்வையற்ற ஒருவர் தொழுது முடித்ததும் கண் பார்வை கிடைத்தது என பரவும் வீடியோவின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மெக்கா ஹரம் ஷரீபில் தராவீஹ் தொழுகையில், ஈஜிப்ட் நாட்டு  சேர்ந்த கண் பார்வையற்ற ஒருவர் தொழுதுக்கொண்டிருந்தார்  கடைசி ரக்யாத்தில் சலாம் கொடுத்து விட்டு எழுந்து வேகமாக சத்தமிடுகிறார்.எனக்கு "அல்லாஹ் ; பார்வை கொண்டுத்துவிடான்...சத்தமிடுகிறார்.... மாஷா அல்லாஹ் ;  "அல்லாஹ் அக்பர்;என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த  2016 ம் ஆண்டு முதல் இணையத்தில் பல்வேறு கால கட்டத்தில் பரவி வருகின்றது

ஆனால் அவருக்கு பிறந்ததில் இருந்து கண் பார்வை தெரியாது என்பது பொய்யானது ஆகும்

அதேபோல் அவருக்கு கண்பார்வை தெரியாது என்பதும் பொய்யானது ஆகும்

அதற்க்கு ஆதாரம் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் அந்த நபர் கையில் கட்டியிருக்கும் வாட்ச் தான் ஆதாரம்


2016 ம் ஆண்டு காலகட்டத்தில் மிகவும் வைரலாக பரவியது  மேலும் அந்த வீடியோ வைரலை தொடர்ந்து அவரது மகன் டேமர் சயீத், தனது தந்தை தனது ஒரு கண்ணில் மட்டும் ரத்தக் கட்டியால் அவதிப்பட்டு வந்ததாகவும், நிரந்தரமாக பார்வையை இழக்கும் வாய்ப்பை எதிர்கொண்டதாகவும் கூறினார். இது மக்காவில் குணப்படுத்தப்பட்டது, முழுமையான குருட்டுத்தன்மை அல்ல. என தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் என அல்பவாஅபா செய்தி வெளியிட்டு இருந்தது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback