நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா school leave tomorrow
நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா
தமிழகத்தில் நாளை (ஜனவரி 7, புதன்கிழமை) இரண்டு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
தஞ்சாவூர் மாவட்டம்:-
தியாகராஜர் ஆராதனைஅதன்படி தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடந்துவரும் தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி நாளை (ஜன.7) ஒருநாள் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு கட்டுவதற்காக வருகிற ஜனவரி 24ஆம் தேதி, சனிக்கிழமை அன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம்:-
நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஜன.7) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டுள்ளார்
Tags: கல்வி செய்திகள்