கிறுஸ்துமஸ் அன்று உலகம் அழியும் என்று மக்களை ஏமாற்றிய போலி தீர்க்கதரிசி கைது முழு விவரம் ebo noah has been arrested.
கிறுஸ்துமஸ் அன்று உலகம் அழியும் என்று மக்களை ஏமாற்றிய போலி தீர்க்கதரிசி கைது முழு விவரம்
கிறிஸ்துமஸ் தினத்தில் ராட்சத வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக, தன்னை தானே தீர்க்கத்தரிசி என சொல்லிக்கொள்ளும் கானாவை சேர்ந்த எபோ நோவா என்பவர் கூறினார்
தன்னை கடவுளின் அவதாரம் என்று மக்களிடம் பரப்பிய அவர் இவரை உள்ளூர் மக்கள் நோவா என்றும் ஜீசஸ் என்றும் கூட அழைக்கின்றனர். மேலும் உலகம் அழிவுக்கு பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போன்ற 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் பணித்திருப்பதாக அவர் கூறி கப்பலை கட்டி வருகின்றார் அவரை பின்தொடர்பவர்கள் தங்களது சொத்துக்களை விற்று அவருக்கு பணம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது
எபோ நோவாவின் கணிப்பின் படி , கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25 ) அன்று தொடங்கும் மழையானது நிற்காமல் 3 ஆண்டுகள் வர ராட்சசத்தனமாக பெய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த தொடர் மழையானது , மிகப் பெரிய வெள்ளமாக மாற உள்ளது. இது பிரளய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை போல மிகப்பெரிய பேரரழிவை ஏற்படுத்த கூடும். இந்த ராட்சச வெள்ளத்தில் உலகில் உள்ள , மிக உயரமான அனைத்து சிகரங்களும் முழுகி விடும். இந்த பெரிய பிரளயம் ஒட்டு மொத்த பூமியையும் ஒரு முடிவில்லாத பெருங்கடலாக மாற்றும். வரவிருக்கும் ஜலப் பிரளயத்தில் மனிதர்கள் மட்டுமல்லாது , அனைத்து உயிரினங்களும் அழியக் கூடும்.இந்த பிரளயத்தில் இருந்து ஒருவர் தப்பிக்க வேண்டும் என்றால் , அவர்கள் தன்னுடைய பேழையில் ஏற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர், ஆதியாகமத்தில் யெகோவாவால் வழிநடத்தப்பட்ட நோவாவைப் போலவே ஒரு பேழையை உருவாக்க கடவுள் தனக்கு கட்டளையிட்டதாகக் கூறுகிறார்.
இதற்காக அவர் சுமார் £2,50,000 செலவில் மரங்களை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஒவ்வொரு பேழையிலும் சுமார் 5000 பேர் வரை தங்க வைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதில் பலர் தங்கள் வீடு, நிலம் மற்றும் நகைகளை விற்று, அந்தப் பணத்தை எபோ நோவாவிடம் கொடுத்துள்ளனர் . புதிய நோவாவின் பேழையில் இடம் பிடிக்க வரிசையில் நிற்கின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/2003834426556547278
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் அன்று என்னுடைய வேண்டுதலை கடவுள் ஏற்று கொண்டிருக்கிறார். அதனால் உலகை அழிக்கும் முடிவை கடவுள் ஒத்திவைத்திருக்கிறார்.அதனால், தொடர்ந்து இன்னும் பல பேழைகளை கட்ட போகிறேன்.
அதற்கு எனக்கு கடவுள் போதிய நேரம் கொடுத்திருக்கிறார் என்று கூறிய அவர், நோவாவை தேடி வந்த மக்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். மகிழ்ச்சியாய் இருங்கள் என கூறினார்.
இதனால் மக்கள் கோபடைந்தனர் அவரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர்
இந்நிலையில் நேற்று புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 அன்று எபோ நோவா கைது செய்யப்பட்டதாக கானா காவல் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தக் கைது வெளியிடப்பட்டது.அந்த அறிக்கையின்படி,
சைபர் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து நிவர்த்தி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, குறிப்பாக 31வது இரவு மத சேவைகளுக்கான ஏற்பாடுகளில், காவல்துறைத் தலைவரின் சிறப்பு சைபர் சோதனைக் குழுவால் எஷுன் கைது செய்யப்பட்டார்.
பொதுமக்கள் மத்தியில் அச்சம், பீதி அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தீர்க்கதரிசனங்கள் அல்லது அறிவிப்புகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக பாதுகாப்பு நிறுவனங்கள் சமீபத்தில் விடுத்த எச்சரிக்கைகளுடன் இந்தக் கைது தொடர்பு இருப்பதாக பரவலான ஆன்லைன் அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து காவல்துறையின் இந்த உறுதிப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், எஷுன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையோ அல்லது விசாரணையில் உள்ள நடத்தையின் சரியான தன்மையையோ போலீசார் வெளியிடவில்லை.அந்த அறிக்கையில், “கானா காவல் சேவை, காவல் துறைத் தலைவரின் சிறப்பு சைபர் சோதனைக் குழுவால் எபோ நோவா என்றும் அழைக்கப்படும் எவன்ஸ் எஷுன் என்ற நபரைக் கைது செய்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
