BREAKING NEWS அதிமுக - பாமக கூட்டணி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக தலைவர் அன்புமணி தற்போது சந்தித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடும். இது இயற்கையான கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
அதிமுக உடனான கூட்டணியில் பாமகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கியது அதிமுககடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
Tags: அரசியல் செய்திகள்