Breaking News

ஜனவரி 8 ம் தேதி முதல் பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..! ரொக்க பணம் உண்டா இல்லையா?

அட்மின் மீடியா
0

ஜனவரி 8 ம் தேதி முதல் பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!



2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நிதி நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்த தமிழக அரசு, ரொக்கப்பணம் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை. எனவே இந்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசின் சார்பில் மக்களை கவரும் வகையில் பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் ரொக்க பணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசின் தரப்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக இன்றோ அல்லது நாளையோ முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் தற்போது அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவிப்பை பொறுத்து வருகிற 4 அல்லது 5ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன.8ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைக்கிறார். 

இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback