Breaking News

வாக்காளர் படிவத்தில் ஒட்டப்படும் போட்டோவில் இஸ்லாமிய பெண்கள் காது தெரியும்படி இருக்க வேண்டும் என பரவும் செய்தி உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
வாக்காளர் படிவத்தில் இஸ்லாமிய பெண்கள் புகைப்படத்தில் காது தெரியும்படி இருக்க வேண்டும் என பரவும் செய்தி உண்மை என்ன?




சமூக வலைதளத்தில் பரவும் செய்தி:-

முக்கியம்:* ⁠     சிறப்பு தீவிர திருத்தப் பதிவுக்கு கொடுக்கப்படும் புகைப்படம் *காது தெரியும் விதத்தில் இருப்பது அவசியம்*. எனவே பெண்கள் ஹிஜாப் அணிந்த புகைப்படத்தை கொடுத்தால் அதில் காது தெரியும் படி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டியது. இல்லை என்றால் பெறப்பட்ட படிவத்தை பதிவேற்ற முடியாது போகலாம். இறுதி நேர சிரமத்தை தவிர்க்க வேண்டுகிறோம்.அனுபவப் பகிர்வு.  என பலரும் ஓர் செய்தியை ஷேர் செய்து வருகின்றார்கள்

உண்மை என்ன:-

பலரும் ஷேர் செய்யும் அந்த தகவல் உண்மை இல்லை

தேர்தல் ஆணையம் அது போல் ஓர் அறிவிப்பை அறிவிக்கவில்லை

இந்த பொய்யான தகவலை யாரும் நம்பவேண்டாம்.

இந்திய தேர்தல் ஆணையம் அது போல் எந்த ஓர் அறிவிப்பையும் இதுவரை அறிவிக்கவில்லை மேலும் இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிவிப்பிலும் அது போல் எந்த ஓர் தகவலும் இல்லை

மேலும் தேர்தல் ஆணைய உதவி மைய எண் 1950 என்பதில் போன் செய்து கேட்டதற்க்கு அது போல் எந்த அறிவிப்பும் இல்லை,  வழக்கம் போல் எடுக்கும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டினால் போதுமானது என கூறினார்கள். 

இது நாள் வரை நாம் வங்கி, பான்கார்டு, ஆதார்கார்டு, பாஸ்போர்ட், மற்றும் பல இடங்களில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை எப்படி கொடுத்தோமோ அது போல் வாக்காளர் படிவத்திலும் நீங்கள் கொடுக்கலாம்.

மேலும் தேர்தல் ஆணைய அறிவிப்பில் வாக்காளர் படிவத்தில் உள்ள உங்கள் புகைப்படம் இருக்கும் அதற்க்கு பதில் தற்போதைய புகைப்படம் மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் அதில் புதிய புகைப்படம் ஒட்டலாம் என்றுதான் தெரிவித்துள்ளது. கட்டாயம் இல்லை, ஆனால் அதில் உள்ள புகைப்படம் பழைய புகைப்படமாக இருக்கும் தற்போதைய புதிய புகைப்படம் ஒட்டினால் நன்றாக இருக்கும் அவ்வளவுதான்

எனவே இது போல் பொய்யான செய்திகளை நம்பாதீர்கள். இன்னும் நீங்கள் நம்பவில்லை என்றால் தேர்தல் ஆணைய உதவி மைய எண் 1950 என்ற எண்ணிற்க்கு ஒரு போன் செய்து கேட்டு கொள்ளுங்கள். 

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback