வாக்காளர் பட்டியல் பூர்த்தி செய்வதில் சந்தேகமா? தேர்தல் ஆணையம் வெளியிட்ட 24 கேள்வி பதில் What is Special Intensive Revision? faq
வாக்காளர் பட்டியல் பூர்த்தி செய்வதில் சந்தேகமா? தேர்தல் ஆணையம் வெளியிட்ட 24 கேள்வி பதில் What is Special Intensive Revision? faq
1) சிறப்பு தீவிர திருத்தம் என்றால் என்ன?
இந்திய தேர்தல் ஆணையம், சட்டத்தின் படி, வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கவும் திருத்தம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் அல்லது தேவைக்கேற்ப தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை திருத்த உத்தரவிடுகிறது. தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளர் บด இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் இப்பட்டியலை சரி செய்து, தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும் எந்த தகுதியுள்ள குடிமகனும் விடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடனும், இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆரம்பித்துள்ளது.
2) சிறப்பு தீவிர திருத்த செயல்முறையின் கால அளவு எவ்வளவு?
சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை 4 நவம்பர் 2025இல் தொடங்கி, 07 பிப்ரவரி 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் நிறைவடையும்.
3) சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறையின் முக்கிய கட்டங்கள் என்ன?
1.வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் கணக்கெடுப்பு கட்டம் 04.11.2025 (செவ்வாய்க்கிழமை) முதல் 04.12.2025 (வியாழக்கிழமை) வரை
2 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 09.12.2025 (செவ்வாய்க்கிழமை)
3. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை/ மறுப்புரைக்கான /விண்ணப்பங்களுக்கான காலம்
4. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை/ மறுப்புரைக்கான /விண்ணப்பங்களுக்கான காலம் 9.12.2025 (செவ்வாய்க்கிழமை) முதல் 31.01.2026 (சனிக்கிழமை)
5. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 07.02.2026 (சனிக்கிழமை)
4) கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்படும் விதங்களுக்கான நடைமுறைகள் என்ன?
A. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, தற்போதைய வாக்காளர்களுக்கு ஏற்கனவே பகுதியளவு முன் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தின் இரண்டு பிரதிகளை வழங்கி, அவற்றை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பதில் வழிகாட்டுவார்கள்.
வாக்காளர்கள் கணக்கீட்டு படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது அடுத்த வருகையின் போது நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெற்று செல்வார்கள்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நிரப்பிய கணக்கீட்டு படிவத்தை சேகரித்து, அதன் ஒரு நகலில் படிவத்தை பெற்று கொண்டதற்கான ஒப்புகை வழங்குவார் அதை வாக்காளர் தன்னிடமே வைத்துக் கொள்ளலாம்.
B. வாக்காளர்கள் கணக்கீட்டு படிவத்தை https://voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் நிரப்பி சமர்ப்பிக்கலாம்; மேலும், 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை கண்டறிய இணையதள தேடல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான விளக்கம் FAQ எண் 7-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
C. தேவையானால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் புதிய வாக்காளர்களைச் சேர்க்க படிவம்-6ஐ உறுதிமொழி படிவத்துடன் வழங்குவார்கள்.
D. ஒவ்வொரு வாக்காளரின் வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வருகை தருவார்.
5) கணக்கீட்டு படிவத்தை பெறவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து பெறலாம் அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வாக்காளர் இல்லாத பட்சத்தில் அவரது குடும்ப உறுப்பினரிடம் அப்படிவம் ஒப்படைக்கப்படும். மேலும், வாக்காளர், https://www.erolls.tn.gov.in/blo/இணையதளத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரின் தொடர்பு எண்ணை பயன்படுத்தி, அவரை தொலைபேசி மூலமாகவோ அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்ட Book a call with BLO என்ற வசதி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
6) கணக்கீட்டு படிவத்தை நிரப்ப முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
கணக்கீட்டு படிவத்தை வழங்கும் போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர் அதை நிரப்புவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார். அதற்குப் பிறகும் வாக்காளர்கள் படிவத்தை நிரப்ப முடியாத நிலையிலிருந்தால், வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) வாக்காளர்களின் வீட்டிற்கு அடுத்தடுத்த முறை வரும்போது, அந்தப் படிவத்தை நிரப்புவதில் அவர்களுக்கு உதவியினை வழங்குவார்.
7) சிறப்பு தீவிர திருத்தம்-2002/2005 வாக்காளர் பட்டியலில் என் பெயர் உள்ளதா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது?
வாக்காளர்கள், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.elections.tn.gov.in மூலம் தங்களது விவரங்களை கண்டறியலாம். அந்தத் தளத்தில் உள்ள "பெயர் மூலம் தேடல்" (Search by Name) அல்லது "EPIC எண் மூலம் தேடல்" (Search by EPIC Number) என்ற விருப்ப தேர்வை பயன்படுத்தி தேடலாம்.
பகுதி வாரியாக (Partwise) உள்ள வாக்காளர் பட்டியலின் PDF வடிவத் தரவுகளும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன; தங்கள் வாக்குச்சாவடி விவரத்தை அறிந்த வாக்காளர்கள், அந்த PDF-பட்டியலில் தங்கள் பெயரைத் தேடவும் முடியும்.
மேலும், சிறப்பு தீவிர திருத்தம்-2002/2005ஆம் ஆண்டிற்கான அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கப்பட்டு உள்ளது; அவர்கள் உங்கள் பெயரைத் (2002/2005 வாக்காளர் பட்டியலில்) தேடுவதற்கு உதவுவார்கள்.
8) 2024 பாராளுமன்றத் தேர்தலில் ஒரு வாக்காளர் வாக்களித்து இருந்தும், சிறப்பு தீவிர திருத்தம்-2002/2005 பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் என்ன செய்ய வேண்டும்?
ஒரு வாக்காளரின் பெயர் சிறப்பு தீவிர திருத்தம் 2002/2005 வாக்காளர் பட்டியலில் காணப்படவில்லை எனில், அவர் அந்த காலப்பகுதியில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. அத்தகைய சூழலில், அந்த வாக்காளர் தமது தந்தை/ தாய் அல்லது தாத்தா /பாட்டி ஆகியோரின் வாக்காளர் விவரங்களைத் 2002/2005 வாக்காளர் பட்டியலில் கண்டறிந்து தேடி, அவர்களின் விவரங்களை கணக்கீட்டு படிவத்தில் அதற்கான பகுதியில் நிரப்பலாம். வாக்காளர், வாக்குச்சவாடி நிலை அலுவலரின் உதவியுடன் பொருத்தமான விவரங்களை கண்டறிந்து சரியாக பதிவுசெய்யலாம்.
9) எனது முகவரியை வாக்காளர் பட்டியலில் மாற்ற எவ்வாறு விண்ணப்பிப்பது?
வரைவு வாக்காளர் பட்டியல் 09.12.2025 அன்று வெளியிடப்பட்ட பிறகு, முகவரி மாற்றங்களைச் செய்ய கோரலாம். ஒரு வாக்காளர் படிவம்-8ஐ பயன்படுத்தி தனது முகவரியினை மாற்றக் கோரும் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். 09.12.2025 முதல் 08.01.2026 வரையிலான உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் காலத்தில் அப்படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதனடிப்படையில் இந்த மாற்றங்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும்.
10) வாக்காளர் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வரும்பொழுது வீட்டில் இல்லாத நிலையில் அவர் எவ்வாறு தனது கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்?
ஒரு வாக்காளர் கணக்கீட்டுப் படிவத்தை பெறுவதற்கு வீட்டில் இல்லாத நிலையில் அவ்வாக்காளர் சார்பாக குடும்பத்தில் உள்ள ஏனைய உறுப்பினர் எவரேனும் கணக்கீட்டு படிவத்தை நிரப்பி கையொப்பமிட்டு சமர்ப்பிக்கலாம்.
11) கணக்கீட்டுப் படிவத்தில் பிழை ஏற்பட்டால், திருத்தலாமா அல்லது புதிய படிவத்தை பெற வேண்டுமா?
புதிய படிவம் வழங்குவதற்கு வழிவகை இல்லை. எனினும் அவர் பெற்ற கணக்கீட்டு படிவத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் தெளிவாக திருத்தம் செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
12) ஆதார் எண் வழங்குவது கட்டாயமா?
கணக்கீட்டுப் படிவத்தில் ஆதார் எண்ணை வழங்குவது கட்டாயமில்லை.
வாக்காளர் விருப்பத்தின்படி மட்டுமே ஆதார் எண்ணைப் பெற முடியும்.
13) கணக்கீட்டு படிவத்தில் நிழற்படம் தவறாக இருந்தால் அல்லது பழையதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
வாக்காளரின் சமீபத்திய நிழற்படம் ஒன்றை கணக்கீட்டு படிவத்தில் அதற்குரிய இடத்தில் ஒட்ட வேண்டும்.
14) வாக்குச்சாவடி நிலை அலுவலர் நிரப்பப்பட்ட படிவங்களை எப்போது திரும்பப் பெறுவார்?
வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கு 3 முறை வருகை தருவார். அவ்வாறு வருகைகளை மேற்கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 04.12.2025-க்குள் திரும்பப் பெறுவார்.
15) 18 வயது நிரம்பிய வாக்காளரின் பெயரை தற்போதைய வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்க முடியுமா?
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம்-6 மற்றும் அதனுடன் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். அதற்கான படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வழங்கப்படும். இந்த படிவங்கள் 09.12.2025 08.01.2026 வரையிலான உரிமைகோரல்கள்/ஆட்சேபணைகள் காலத்தில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும். அவ்வாறு இறுதி செய்யப்படும் விவரம் இறுதி வாக்காளர் பட்டியலில் பிரதிபலிக்கும்.
16) இந்த ஆண்டின் பிற்பகுதியில் எனக்கு 18 வயது நிரம்பினால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க முடியுமா?
01.01.2026 அன்று 18 வயது நிறைவு செய்யும் வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடு தோறும் வருகை தரும் பொழுது அவரிடமிருந்து படிவம்-6 பூர்த்தி செய்து உறுதிமொழிப் படிவத்துடன் சமர்ப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பங்கள், தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும்; விண்ணப்பதாரர்கள் தகுதி வாய்ந்தவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டால், அவர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
17) கணக்கீட்டு படிவம் அல்லது வாக்காளர் விவரம் தேடுதல் வசதி தொடர்பான சங்தேகங்களுக்கான உதவிகளை எங்கே பெற முடியும்?
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்ய வாக்காளர் விவரங்களை தேடவும் உதவுவார்கள். அவர்கள் ஒவ்வொரு வாக்காளர் வீட்டிற்கும் மூன்று முறை வருகை புரிவார்கள். மேலும், கட்டணமில்லா வாக்காளர் உதவி எண்.1950-ஐ தொடர்பு கொள்ளலாம், அதுமட்டுமின்றி https://voters.eci.gov.inஎன்ற இணையதளத்திலுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் அழைப்பு (Book a call with BLO) என்ற வசதியினையும் பயன்படுத்தலாம்.
18) கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்ய வசதி உள்ளதா?
ஆம். வாக்காளர்களின் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in-இல் கணக்கீட்டு படிவத்தை இணையதளம் மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
19) கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் பூர்த்தி செய்யும் நடைமுறைகள் என்ன?
வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணையதளம் மூலம் (online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் இணையதளம் மூலம் (online) உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும். பின்னர், "Fill Enumeration Form" என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.
இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் காட்டப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.
தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
20) சிறப்பு தீவிர திருத்தம்-2002/2005 வாக்காளர் பட்டியலில் பெற்றோர்/பாட்டி-தாத்தா விவரங்களை இணையதளம் மூலம் எவ்வாறு கண்டறிவது?
சிறப்பு தீவிர திருத்தம்-2002/2005 வாக்காளர் பட்டியலில் பெற்றோர்/பாட்டி-தாத்தா விவரங்களை https://www.elections.tn.gov.in என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அவர்களின் அலுவலக இணையதளத்தில் அவர்களது பெயர் அல்லது அவர்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் கண்டறியலாம்.
21) ஒரு வாக்காளர் அல்லது அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இல்லாமல் வெளியே சென்றிருந்தால், அந்தப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?
ஒரு வாக்காளர் அல்லது அவரது குடும்பத்தினர் அனைவரும் வீடு வீடாகச் செல்லும் கணக்கெடுப்பு கட்டத்தில் வீட்டில் இல்லாமல் இருந்தால், அவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in மூலம் கணக்கீட்டுப் படிவத்தை சமர்ப்பிக்கும் வசதியைப் பயன்படுத்தலாம். இந்த வசதி, வாக்காளர்கள் தங்களது வீட்டில் நேரில் இல்லாத நிலையிலும் கணக்கெடுப்பு செயல்முறையை முடிக்க உதவுகிறது.
22) கணக்கீட்டுப் படிவங்களை திருப்பி அளிக்காவிடில் என்ன நிகழும்?
வாக்காளர்கள், கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பி, அதை தங்களுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கணக்கீட்டுப் படிவங்களை திருப்பி அளிக்காத வாக்காளர்களை பொருத்தமட்டில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் அருகிலுள்ள வாக்காளர்களிடம் விசாரணை நடத்தி அங்கு அவ்வாக்காளரின் இருப்பு குறித்தும் இறந்தவர்/ இடம் பெயர்ந்தவர் /இரட்டைப்பதிவு என்பது போன்ற விவரங்களை கண்டறிவார்.
23) வாக்காளர்கள் எந்த நேரத்தில் ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?
வாக்காளர்கள் கணக்கெடுப்பு கட்டத்தில் எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவையில்லை. ஆனால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் தகுதியில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் / உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய வாக்காளருக்கு அறிவிப்பினை(Notice) வழங்கினால், அந்த
வாக்காளர் தன் தகுதியை நிரூபிக்கும் ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தேர்தல் ஆணையம் கீழே குறிப்பிட்டுள்ள தேவையான ஆதார ஆவணங்களின் பட்டியலை வழங்கியுள்ளது; வாக்காளர்கள் அவற்றை சமர்ப்பிக்கலாம்.
1. மத்திய அரசு/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்/ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை/ ஓய்வூதிய ஆணை.
2. 01.01.1987 க்கு முன்னர் இந்தியாவில் அரசு/உள்ளாட்சி அமைப்புகள்/வங்கிகள்/ அஞ்சல் அலுவலகம்/ எல்ஐசி/ பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை/ சான்றிதழ்/ ஆவணம்.
3. தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.
4. கடவுச்சீட்டு
5. அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் மற்றும் /கல்விச் பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிகுலேஷன் சான்றிதழ்.
6. தகுதிவாய்ந்த மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்
7. வன உரிமைச் சான்றிதழ்
8. தகுதிவாய்ந்த அதிகாரி வழங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) /அட்டவணை வகுப்பினர் (SC) / பழங்குடியினர் (ST) அல்லது பிற சாதிச் சான்றிதழ்.
9. தேசிய குடிமக்கள் பதிவேடு (நடைமுறையில் உள்ள இடங்களில்)
10. மாநில/உள்ளாட்சி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு.
11. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்.
12.ஆதார் அட்டைக்கு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடித எண்.23/2025-ERS/Vol.II, न 09.09.2025-2(4-II) அறிவுரைகள் பொருந்தும்.
13.01.07.2025 அன்று தகுதி தேதியாக கொண்டு வெளியிடப்பட்ட பீகார் சிறப்புத் தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் நகல்.
24) வெளிநாடு/வேறு நகரத்தில்/மாநிலத்தில் பணியில் உள்ளவரின் கணக்கீட்டுப் படிவத்தினை எவ்வாறு பூர்த்தி செய்து சமர்ப்பிப்பது?
குடும்பத்தில் உள்ள வாக்காளர் வெளிநாட்டில் பணிபுரிந்தாலோ அல்லது பிற நகரம் / மாநிலத்திலோ பணிபுரிபவராக இருந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளரின் கணக்கீட்டு படிவத்தை குடும்பத்தில் உள்ள வயது வந்த உறுப்பினரிடம் வாக்குச்சாவடி நிலை அலுவலரால் ஒப்படைக்கப்படும். அவர்கள் அப்படிவங்களில் வாக்காளரின் விவரங்களை பூர்த்தி செய்யலாம், மேலும் அவர்கள் வாக்காளர் சார்பில் கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம்..
1)What is Special Intensive Revision?
The Election Commission of India, as per the law is empowered for preparation and revision of Electoral Rolls. To maintain the integrity of the electoral roll, the Commission orders revision of electoral roll before every election or as per requirement. Now, since many changes have occurred in the existing electoral roll due to frequent migration which has resulted in electors getting registered in more than one place, non removal of dead voters the Election Commission announced the Special Intensive Revision with the objective that no eligible citizen is left out and no ineligible person is included.
2)What is the duration of SIR process?
The SIR activity starts from 4th November 2025 and will end-up with publication of Final electoral roll on 07.02.2026.
3)What are the phases of SIR?
1. House to House Enumeration 04.11.2025 (Tuesday) to 04.12.2025 (Thursday)
2. Publication of draft electoral roll On 09.12.2025 (Tuesday)
3. Period of filing claims & objections 09.12.2025 (Tuesday) to 08.01.2026 (Thursday)
4. Notice Phase (Issuance, hearing & verification); decision on Enumeration Forms and disposal of claims and objections to be done concurrently by the EROs 09.12.2025 (Tuesday) to 31.01.2026 (Saturday)
5. Final Publication of Electoral Roll On 07.02.2026 (Saturday) 4)What are the procedures adopted for distribution of Enumeration Form?
(a) The Booth level Officers (BLOs) will visit each house hold and distribute the pre-printed Enumeration forms in duplicate to the existing electors and guide them in filling up the form.
The electors will have to file the relevant details in the Enumeration forms and the filled in Enumeration form will be collected by the Booth Level Officers during the subsequent visit.
The Booth level officer will collect the forms and keep one copy of the Enumeration form with him/her and give an acknowledgement of receipt of form on the other copy of Enumeration Form, which is to be retained by the elector.
(b) The Elector can also fill the Enumeration Form online and submit for which provision is provided in the ECI website https://voters.eci.govi.in. An online search facility is available to enable electors to search their details in SIR 2002/2005. Further information on this facility is provided under FAQ No. 7.
c) Booth Level Officers will also provide Form-6 along with declaration form for enrolment of new electors, if required. d) The Booth Level Officer will make at least 3 visits to the house of each elector.
5) What should I do if I did not receive my Enumeration Form (EF)?
The Enumeration Form will be made available either through Booth Level Officer or it can be accessed from the official website https://voters.eci.gov.in. In case of your absence, the form will be handed over to any adult member of your family. An elector can also contact the Booth Level Officer either over phone using the contact number of Booth Level Officer available in https://www.erolls.tn.gov.in/blo/ in case he/she has not received the Enumeration Form or through the Book a Call with BLO option which is available in the website https://voters.eci.gov.in
6) What should I do if I am unable to fill the Enumeration form?
During the distribution of Enumeration Form, the Booth Level Officer will guide the elector to fill in the form. In case, if the electors are unable to fill the Enumeration Form even after that, the BLO will assist the electors in filling the form while making subsequent visits to the elector’s house.
7) How do I check whether my name already exists in the Electoral Roll of SIR, 2002/2005?
The details can be retrieved by the voters from the official website of the Chief Electoral Officer, Tamil Nadu at https://www.elections.tn.gov.in by using the “search by name” or “search by EPIC Number” options available in the search facility of the portal. Partwise electoral roll data in PDF is also hosted in the site and electors knowing their polling station can search their names in the PDF also. The printed hard copy of Electoral Roll of SIR, 2002/2005 is available with the Booth Level Officer and they will assist to find out your name.
8)What should be done if name of an Elector is not found in the Electoral Roll of SIR 2002/2005,
even though he voted in 2024 parliament elections? If the name of an Elector is not found in the Electoral Roll of SIR 2002/2005, it means that he may have not enrolled during that time, in that case he can try to retrieve the elector details of his/her parents/grand parents and their details shall be filled in the Enumeration Form in the respective column. The elector can take the help of Booth Level Officer and they will assist in identifying the appropriate details.
9) How do I update my address if I have moved to a new location?
Address changes can be done after the publication of draft electoral roll on 09.12.2025. The elector can apply in Form 8 to the Electoral Registration Officer for updating the address. These forms will be processed during the Claims and Objections period, from 09.12.2025 (Tuesday) to 08.01.2026 (Thursday). These changes will be reflected in the final roll.
10) If an elector is not available in his house, during the visit of the BLO, how can he submit the Enumeration Form?
If an elector is not available in person to fill the details in the Enumeration Form, on behalf of the elector any adult member of the family can fill up and sign the Enumeration Form and can submit it.
11) Can I make corrections in the Enumeration Form or do I need to get a fresh Enumeration Form from the Booth Level Officer?
There is no provision to obtain a fresh form, corrections if any shall be made in the Enumeration Form ensuring that corrected information is written clearly and accurately before submitting the form to the Booth Level Officer.
12) Is it mandatory to provide Aadhaar number for submission of Enumeration Form?
No, providing Aadhaar number in the Enumeration Form is optional and only if elector desires to provide it, they can fill the Aadhaar number in the Form.
13) What should I do if the photograph printed in my Enumeration Form is incorrect or outdated?
A copy of the recent photograph shall be affixed in the Enumeration Form in the space provided for it.
14) How long does it take for Booth Level Officers to collect the filled forms after distribution?
The Booth Level Officers will make at least 3 visits and will collect the filled in forms before 04.12.2025.
15) Can a new elector who had completed 18 years, apply for inclusion of his/her name in the electoral roll now?
The new elector who has completed 18 years shall fill up the Form 6 given by the Booth Level Officer along with declaration form for enrolment. The blank forms will be supplied by the BLO. These Forms will be processed by the Electoral Registration Officer of the concerned Assembly Constituency during the claims and objections period starting from 09.12.2025 to 08.01.2026 and the inclusion will be reflected in the final roll.
16) Can I apply for inclusion if I will turn 18 later in the year?
For inclusion in the electoral roll, the electors who will be attaining the age of 18 years as on 01.01.2026 can also submit the Form 6 along with Declaration Form by obtaining it from the Booth Level Officer, while they come for House to House enumeration. Their applications will be processed by the Electoral Registration Officer concerned and if found eligible their names will be included in the final roll.
17) Where can I find help if I face issues with the Enumeration Form filling or to search the electors details.?
The Booth level Officers (BLOs) who visit each house will guide in filling up the form and to search the elector details. The Booth Level Officers will be visiting each house three times. The voters can also contact Toll Free Voter Helpline Number – 1950 or use Book a Call with BLO facility available in the website https://voters.eci.gov.in.
18)Whether online facility is available for filling up Enumeration Form?
Yes. Online facility is provided by the Election Commission of India (ECI) in the website https://voters.eci.gov.in for the convenience of electors to fill up the Enumeration Form online.
19) What is the procedure to fill Online Enumeration Form?
The Election Commission of India (ECI) has made a provision on its official website https://voters.eci.gov.in for the convenience of electors to fill up the Enumeration Form online. Electors can log in to the portal using their registered mobile number or EPIC number, and authenticate themselves by entering the OTP received on their registered mobile number. After login, they can select the option available under the caption “Fill Enumeration Form.” This facility is available to all electors whose name in the electoral roll matches with the name in their Aadhaar card. Upon successful login, the elector is required to fill in the necessary details displayed on the webpage. After submitting the correct details, the system will redirect the elector to the e-sign page. An OTP will then be sent to the registered mobile number for authentication, and upon entering the OTP, the form will be successfully uploaded. All electors who have registered their mobile numbers and whose names match in both Electoral Roll and Aadhaar records are requested to make use of this convenient online facility.
20) How can I trace the details of my parents/grandparents in SIR-2002/2005 through Online?
The details of parents/grandparents in SIR-2002/2005 can be traced from the official website of the Chief Electoral Officer, Tamil Nadu at https://www.elections.tn.gov.in by using the “search by name” or “search by EPIC Number” options available in the portal.
21) If an elector or his/her entire family is out of station, then how the form can be submitted?
If an elector or their entire family is out of station during the Houseto-House Enumeration Phase, they may utilize the option of submitting online Enumeration Form which can be accessed through the Election Commission of India’s official portal at https://voters.eci.gov.in. This facility enables electors to complete the process even when they are not physically present at their residence.
22) What happens if the Enumeration Forms are not returned?
It is requested that the Enumeration Form shall be filled and returned by the electors to the respective Booth Level Officer. For electors whose Enumeration Forms are not returned, the Booth Level Officer will identify the cause such as Absent/Death/Shifted/Duplicate based on inquiry from nearby electors.
23) When a voter needs to submit documents and what are the documents to be submitted?
During Enumeration phase, no document is required to be provided by the elector. However, after the publication of draft Electoral Roll, if Electoral Registration Officer/Assistant Electoral Registration Officer doubts the eligibility of the proposed elector issues notice to such elector, then the concerned elector will have to provide supportive documents to prove his eligibility. The ECI has suggested the below list of necessary supportive documents which may be provided by Electors. 1. Any Identity card/Pension Payment Order issued to a regular employee/pensioner of any Central Govt./State Govt./PSU. 2. Any Identity Card/Certificate/Document issued in India by the Government/ local authorities/Banks/Post Office/LIC/PSUs prior to 01.07.1987. 3. Birth Certificate issued by the competent authority. 4. Passport 5. Matriculation/Educational certificate issued by recognised Boards/Universities 6. Permanent Residence certificate issued by the competent State authority 7. Forest Right Certificate 8. OBC/SC/ST or any caste certificate issued by the Competent Authority 9. National Register of Citizens (wherever it exists) 10. Family Register, prepared by State/Local authorities. 11. Any land/house allotment certificate by the Government 12. For Aadhaar, the Commission’s directions issued vide letter No. 23/2025-ERS/Vol.II dated 09.09.2025 (Annexure II) shall apply. 13. Extract of the electoral roll of Bihar SIR with reference to 01.07.2025.
24) If a voter in the family is employed abroad or working in other city/State how the person’s Enumeration Form can be filled up?
If a voter in the family is employed abroad or working in other city /State, the Enumeration Form of the concerned elector may be handed over to an adult member of the family. They can fill up the details of that non-available elector in the Enumeration Form, they can sign on behalf of the elector and submit it to the Booth Level Officer.
Tags: தமிழக செய்திகள்
