RCB ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக 799 ரூபாய் இலவச ரீசார்ஜ் என பரவும் செய்தி உண்மை என்ன rcb free recharge offer fake
அட்மின் மீடியா
0
RCB ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக 799 ரூபாய் இலவச ரீசார்ஜ் என பரவும் செய்தி உண்மை என்னrcb free recharge offer fake
பரவும் செய்தி:-
*🏆 RCB WIN 2025 IPL TROPHY 🏆*
RCB ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக, JIO, Vi மற்றும் Airtel ஆகியவை அனைத்து இந்தியர்களுக்கும் 3 மாதங்களுக்கு 799 ரீசார்ஜை இலவசமாக வழங்குகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து இப்போதே ரீசார்ஜ் செய்யுங்கள்.இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே👇
https://ipl-25-racharget3.spot.com/
உண்மை என்ன:-
இதுபோல் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் எந்த வித ரீசார்ஜ் திட்டத்தையும் அறிவிக்கவில்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி இணையதளம் போலியான பிஷ்ஷிங் இணையதளம் ஆகும்
இருப்பினும், நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்தால், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்கும் ஒரு போலி வலைத்தளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இந்தத் தகவலை ஸ்கேமர்கள் அடையாளத் திருட்டு அல்லது நிதி மோசடி செய்யப் பயன்படுத்தலாம்.
இலவச மொபைல் ரீசார்ஜ் செய்வதாகக் கூறப்படும் செய்தியை நீங்கள் பெற்றால், செய்தியில் உள்ள எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம்.
தெரியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
மோசடி குறித்து காவல்துறை மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது
முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால்...
அது போல் ஓர் செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்
இரண்டாவது எச்சரிக்கை அவசியம்
இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்
மூன்றாவதாக கவனம் தேவை
இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப அந்த லின்ங்கில் போனாலும் மீண்டும் அதே போல் தான் ஒன்றும் இருக்காது
நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.
இது போன்ற பொய்யான செய்திகளால் உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மை எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்
மெசேஜ் உடன் வலம் வரும் இந்த மெசேஜ் போலியானது என்பதால் அதில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் தனிப்பட தரவுகள் திருடு போகும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் இதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டாம்
மேலும் நீங்கள் சிந்திக்க
இதுபோல் பல லின்ங்குகள் இதுவரை சமூக வலைதளங்களில் பரவி உள்ளது ஏன் நீங்களே இது போல் பல லின்ங்கினை ஷேர் செய்து உள்ளீர்களே மறந்து விட்டீர்களா
ஹோண்டா பைக் இலவசம்
ரீசார்ஜ் இலவசம்
லேப்டாப் இலவசம்
லாக்டவுன் ரூ 5000 இலவசம்
10 ஜிபி இலவசம்
என நீங்கள் ஷேர் செய்த பொய்யான வதந்தி செய்தி போல் தான் இதுவும்
எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என அட்மின் மீடியா சார்பாக வேண்டி கேட்டு கொள்கின்றோம்
இதுவரை நீங்கள் பரப்பிய பொய் செய்திகள்
ஹோண்டா பைக் இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?