Breaking News

FACT CHECK: 159 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி ,19 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் : வதந்தியை நம்பி ஷேர் செய்யாதீங்க

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  *Flipkart Big Saving Day Sale* 
 
*1. Smart TV* - Rs.159 Only. 
 
*2. Sony Headphone* - Rs. 9 Only. 
 
*3. Oppo Smartphone* - Rs 19 Only. 
 
*4. Samsung Mobile* - Rs 29 Only. 
 
And many more products at *99 percent discount* 
 
*Order Now* - http://bit.ly/3xIe 
 
(Free Delivery And COD Also Available)

என்று  ஒரு பதிவை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


இது போல் சமூக வலைதளங்களில் அடிக்கடி செய்தி பரவி கொண்டுதான் உள்ளது

ஹோண்டா பைக் இலவசம் 

லேப் டாப் இலவசம்

மொபைல் இலவசம் என்று ஏதாவது லின்ங் அவ்வபோது வந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் வாங்கியவர்கள் தான் யாரும் இல்லை

ஆனால் ஏமாறியவர்கள் பலர் , அவ்வபோது செய்தியில் பார்த்து கொண்டுதான் உள்ளோம்


இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள்முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது

முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால்...

இந்த மாதிரி செய்திகளை எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

இதுவரைக்கும் எந்த  நிறுவனமும் ஆதாரபூர்வமாக யாருக்குமே இதுபோன்ற இலவசமாக லிங்கின் மூலம் கொடுத்ததில்லை


இரண்டாவது இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்

மூன்றாவதாக எந்த ஒரு நிறுவனமும் சோஷியல் நெட்வேர்கில் இது போன்ற link அனுப்பாது. 

அந்த வெப்சைட்டில் நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றாலே தெரியும் இது ஒரிஜினல் கிடையாது இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்குஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப போனாலும் ஒன்றும் இருக்காது நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க 

நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.


இது போன்றபொய்யான செய்திகளால்  உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது  ஆதாரபூர்வமான உண்மை

எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback