Breaking News

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மாற்றம் புதிய ஆளுநர் யார் தெரியுமா முழு விவரம்

அட்மின் மீடியா
0

மேற்குவங்கத்தின் ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் மேற்குவங்கத்தில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார். 

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலத்தின் ஆளுநராக சி.என். ஆனந்த் போஸ், மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். 

இந்த 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு தேர்தல் வரவிருக்கிறது. இந்தச் சூழலில் மேற்குவங்கம் மாநிலத்தின் ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில், “சி.வி. ஆனந்த் போஸ் தனது ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

மேலும், ஆர்.என். ரவி, மேற்குவங்கம் ஆளுநராக நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் எனக்குத் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக என்னிடம் எந்த ஒரு கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். 

கேரள ஆளுநராக பதவி வகிக்கும் ராஜேந்திர விஸ்வநாத்துக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback