Breaking News

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க பிப்ரவரி 28ம் தேதி வரை அவகாசம் - அமைச்சர் செந்தில் பாலாஜி TNEB Aadhaar Card Link Online

அட்மின் மீடியா
0

 

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

 


தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என  மின் வாரியம் அறிவித்திருந்தது,இந்த நிலையில், மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி அவகாசம் இதுதான். இதனை நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

யாரெல்லாம் ஆதார் எண் இனைக்கவேண்டும்

முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெரும் 

வீட்டு நுகர்வோர், 

குடிசை நுகர்வோர், 

பொது வழிபாட்டுத்தலங்கள், 

விவசாய பயன்பாடு மின் இணைப்புகள், 

விசைத்தறி, 

கைத்தறி நுகர்வோர்கள் 

என மானியம் பெரும் நுகர்வோர்கள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

யாரெல்லாம் ஆதார் எண் இணைக்கத் தேவையில்லை

தொழிற்சாலைகள், 

கடைகள், 

நிறுவனங்கள் 

போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வசதி அளிக்கப்பட்டுள்ளதுரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி:-
 
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மின் வாரியம் தற்போது எளிமையாக்கி உள்ளது. இனி ஆதார் கார்டினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டாம். ஆதார் எண் மட்டும் போதும். 

முதலில் மின்வாரிய அதிகாரபூர்வ இணையதளம் செல்லுங்கள்  https://www.tangedco.gov.in/

அடுத்து அதில் உள்ள CONSUMER INFO என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் உள்ள TANGEDCO  link your service connection with aadhar 

அல்லது  https://adhar.tnebltd.org/Aadhaar/ இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மின் இணைப்பு எண்ணை முழுமையாக பதிவிட வேண்டும். 

அடுத்து நீங்கள் யாருடைய ஆதார் எண்ணை பதிவிட உள்ளீர்களோ அந்த ஆதார் எண்ணில் இணைத்த மொபைல் எண்ணை பதிவிடுங்கள்.

அதன் கீழ் உள்ள கேப்சாவை சரியாக பதிவிட்டு எண்டர் கொடுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில்  உரிமையாளர், அல்லது வாடகைதாரர் என அத்னை கிளிக் செய்யுங்கள்.

அதன்பின்பு உங்கள் ஆதார் எண்ணை சரியாக பதிவிடுங்கள்

அடுத்து ஆதாருடன் பதிவிட்டுள்ள மொபைல் எண்னுக்கு வரும் OTP யை பதிவிடுங்கள். அவ்வளவுதான் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு முடிந்துவிட்டது அவ்வளவுதான்.

இதற்க்கு முன்பு ஆதார் எண்ணுடன் அதன் நகலையும் பதிவேற்ற வேண்டும். ஆனால் தற்போது இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைந்துள்ளதா? சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2023/01/tneb-aadhaar-card-link-online-status.html

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback