மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைந்துள்ளதா? சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் TNEB Aadhaar Card Link Online Status
மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரம் முறைகேடாக செல்வதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் ஆதார் எண் இனைக்கவேண்டும்
முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெரும்
வீட்டு நுகர்வோர்,
குடிசை நுகர்வோர்,
பொது வழிபாட்டுத்தலங்கள்,
விவசாய பயன்பாடு மின் இணைப்புகள்,
விசைத்தறி,
கைத்தறி நுகர்வோர்கள்
என மானியம் பெரும் நுகர்வோர்கள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
யாரெல்லாம் ஆதார் எண் இணைக்கத் தேவையில்லை
தொழிற்சாலைகள்,
கடைகள்,
நிறுவனங்கள்
போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வசதி அளிக்கப்பட்டுள்ளதுரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் மின்வாரிய அதிகாரபூர்வ இணையதளம் செல்லுங்கள் https://www.tangedco.gov.in/
அடுத்து அதில் உள்ள CONSUMER INFO என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் உள்ள TANGEDCO link your service connection with aadhar
அல்லது https://adhar.tnebltd.org/Aadhaar/ இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மின் இணைப்பு எண்ணை முழுமையாக பதிவிட வேண்டும்.
அடுத்து நீங்கள் யாருடைய ஆதார் எண்ணை பதிவிட உள்ளீர்களோ அந்த ஆதார் எண்ணில் இணைத்த மொபைல் எண்ணை பதிவிடுங்கள்.
அதன் கீழ் உள்ள கேப்சாவை சரியாக பதிவிட்டு எண்டர் கொடுங்கள்
அடுத்து வரும் பக்கத்தில் உரிமையாளர், அல்லது வாடகைதாரர் என அத்னை கிளிக் செய்யுங்கள்.
அதன்பின்பு உங்கள் ஆதார் எண்ணை சரியாக பதிவிடுங்கள்
அடுத்து ஆதாருடன் பதிவிட்டுள்ள மொபைல் எண்னுக்கு வரும் OTP யை பதிவிடுங்கள். அவ்வளவுதான் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு முடிந்துவிட்டது அவ்வளவுதான்.
இதற்க்கு முன்பு ஆதார் எண்ணுடன் அதன் நகலையும் பதிவேற்ற வேண்டும். ஆனால் தற்போது இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது
இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்
மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க நீங்கள் உங்கள் மின் அலுவலகம் சென்று ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்து கொள்ளலாம்
அல்லது
முதலில் மின்வாரிய அதிகாரபூர்வ இணையதளம் செல்லுங்கள் https://www.tangedco.gov.in/
அடுத்து அதில் உள்ள CONSUMER INFO என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் உள்ள TANGEDCO link your service connection with aadhar
அல்லது https://adhar.tnebltd.org/Aadhaar/ இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மின் இணைப்பு எண்ணை முழுமையாக பதிவிட வேண்டும்.
அடுத்து நீங்கள் யாருடைய ஆதார் எண்ணை பதிவிட உள்ளீர்களோ அந்த ஆதார் எண்ணில் இணைத்த மொபைல் எண்ணை பதிவிடுங்கள்.
அதன் கீழ் உள்ள கேப்சாவை சரியாக பதிவிட்டு எண்டர் கொடுங்கள்
அதில் நீங்கள் ஏற்கனவே இணைத்துள்ளீர்கள் என்றால் ஏற்கனவே ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என திரையில் காட்டப்படும்
இல்லை என்றால் நீங்கள் அதில் உங்கள் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்
அல்லது
https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நுகர்வோர்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
மேல் உள்ள இணையதளத்தில் மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவிட்டால் அதில் உங்கள் மின் இணைப்பு எண் விவரங்கள் காட்டப்படும். ஆதார் Updated என்ற விவரமும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆதார் எண் அப்டேட் ஆகவில்லை என்றால் நீங்கள் ஆதாரை இணைத்துகொள்ளலாம்
Tags: முக்கிய செய்தி