Breaking News

இனி திருமணச் சான்றிதழை ஆன்லைனில் திருத்தம் செய்யலாம் தமிழக அரசு

அட்மின் மீடியா
0

திருமணச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே திருத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



திருமணத்தைப் பதிவுசெய்ய அசல் ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். திருமணச் சான்றிதழில் சிறுசிறு திருத்தங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதை மாற்ற வேண்டும். 

இந்நிலையில், திருமணச் சான்றிதழை இணையதளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

இனி சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல தேவை கிடையாது. திருமணம் முடிந்த தம்பதிகள் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தின் மூலம் பயனர் பதிவை உருவாக்கி திருமண பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை. திருமணம் முடிந்த தம்பதிகள் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தின் மூலம் பயனர் பதிவை உருவாக்கி திருமண பதிவு திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


ஆன்லைனில் திருமணம் பதிவு செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்


https://www.adminmedia.in/2020/09/blog-post_6.html

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback