Breaking News

ஆன்லைனில் திருமணம் பதிவு செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்

அட்மின் மீடியா
0


தமிழ்நாடு திருமண பதிவு செய்வது ஆன்லைனில்  பதிவு செய்வது எப்படி? 


  • முதலில் tnreginet.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் லாகின் ஐடியை கிரியேட் செய்து லாகின் செய்து கொள்ளவும்.

  • பின்பு அதில் பதிவு செய்தல் என்பதை கிளிக் செய்துஅவற்றில் திருமண பதிவு என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நிறைய ஆப்ஷன்கள் காட்டப்படும். அவற்றில் எந்த திருமணத்தை பதிவு செய்யவேண்டுமோ அவற்றை  தேர்வு செய்யும் போது விண்ணப்பத்தை உருவாக்குக என்று வரும் அதனை கிளிக் செய்யவும். அடுத்து கிளிக் செய்தவுடன் விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை முழுவதும் கவனமாக படித்த பின் கீழே பதிவு செய்தலுக்கு தொடர்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


  • அதில் 4 பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். 1. கணவரின் விவரம், 2. மனைவியின் விவரம், 3. சாட்சிகளின் விவரம் 4.  இதர விவரங்கள் என்று இருக்கும்.அவற்றை ஒவ்வொன்றாக கிளிக் செய்து அவர்களின் விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்யது தேவையான ஆவணங்களை அட்டாச் செய்து கொள்ளுங்கள்


  • அடுத்து திருமண பதிவை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றை தாங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என்று இரண்டு முறையிலும் செலுத்தலாம். ஆன்லைன் முறை செலுத்த வேண்டும் என்றால் டெபிட் கார்ட், கிரிடிட் கார்ட் வசதியை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.


  • அடுத்து இப்பொழுது தாங்கள் பதிவு செய்த தகவல்  pdf-ஆகா காட்டப்படும் அவற்றை டவுன்லோட் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். 



  • பின்பு திரும்பவும் home page-க்கு சென்று அவற்றில் திருமணம் பதிவு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அவற்றில் விண்ணப்பத்தினை தேடுக என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இவற்றை கிளிக் செய்தவுடன் நீங்கள் ஏற்கெனவே கிரியேட் செய்த documents இருக்கும். 

  • அவற்றை கிளிக் செய்து பின்  செயல்பாட்டினை துவக்குக என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இவற்றை கிளிக் செய்தவுடன் தாங்கள் எந்த register office-க்கு செல்ல போகிறீர்களோ அந்த அலுவலகத்தின் விவரம் மற்றும் தாங்கள் எந்த தேதிக்கு செல்ல போகிறீர்களோ அவற்றின் விவரத்தை உள்ளிட்ட வேண்டும். இப்பொழுது தங்களுக்கு appointment வழங்கப்படும்.

  • தாங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி இருந்தால் உங்களுக்கான payment receipt & appointment Sheet இரண்டும் வரும் அவற்றை தாங்கள் பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு வழங்கப்பட்ட appointment அன்று r நீங்கள் அப்லோடு செய்த அசல் ஆவணங்களையும்,மற்றும் சாட்சிகளையும் அழைத்துகொண்டு  egister office-க்கு செல்ல வேண்டும்.அவ்வவுதான்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback