FACT CHECK: ஆட்டுகறி மூலம் கருப்பு பூஞ்சை பரவுகின்றது என பரவும் வதந்தி? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஆட்டுக்கறி சாப்பிட்டால் கருப்பு பூஞ்சை நோய் மிக விரைவாக தாக்கக்கூடும் மருத்துவர்கள் புதிய கண்டுபிடிப்பு என்று ஒரு ஆட்டுபுகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த தகவல் தவறானது ஆகும்
ஆட்டு இறைச்சி மூலம் கருப்பு பூஞ்சை பரவும் என்பதே தவறான செய்தி, ஏன் என்றால் கரூப்பு பூஞ்சை என்பது கொரானாபோல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் நோய் கிடையாது
கருப்பு பூஞ்சை நோய் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஸ்டீராய்டு மருந்து அதிகம் உட்கொள்பவர்கள், கட்டுப்பாடற்ற நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை எளிதில் வருகின்றது.
ஆனால் மட்டன் சாப்பிட்டால் வரும், சிக்கன் சாப்பிட்டால் வரும் என்பது எல்லாம் சுத்த பொய்யான தகவல் ஆகும்
ஊரடங்கில் கறி விலை ஏறிவிட்டது என்று யாரோ பொய்யாக கிளப்பிவிட்ட வதந்தி தான் அது
இது போல் தான் கடந்த ஆண்டும் கோழி கறி மூலம் கொரானா பரவுகின்றது என பொய்யாக பரப்பினார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன? அரசு வழிகாட்டுதல் வெளியீடு!
அட்மின் மீடியாவின் ஆதாரம்
FACT CHECK கோமியம் குடிப்பதால் கருப்பு பூஞ்சை வரும் என பிபிசி செய்தி வெளியிட்டதா? உண்மை என்ன
அட்மின் மீடியாவின் ஆதாரம்
கருப்புப்பூஞ்சை மனிதனைத் தாக்குவது எப்படி?அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் வராமல் காக்கும் முறைகள் பற்றி விவரிக்கின்றார் மருத்துவர் நிலோபர் நிஷா
அட்மின் மீடியாவின் ஆதாரம்
What is #Mucormycosis (Black Fungus) and how can you detect early sign or symptoms of it?
— PIB Fact Check (@PIBFactCheck) May 16, 2021
Take a look at this #PIBFacTree and learn about the screening, diagnosis and management methods of #Mucormycosis.#IndiaFightsCorona #Unite2FightCorona pic.twitter.com/IOJPekzHNc
Tags: FACT CHECK மறுப்பு செய்தி