Breaking News

FACT CHECK: அப்துல்கலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் என பரவும் பொய் செய்தி?

அட்மின் மீடியா
1


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அனைவருக்கும் வணக்கம்.10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி.பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார்.75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 10000/_ ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.25000/_ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவும். உயர் நீதிமன்ற உத்தரவு எண்:WP (MD) NO.20559/2015 என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


இந்த செய்தி பல ஆண்டுகளாக சமூகவலைதளங்கலில் வலம் வரும் பொய்யான செய்தி ஆகும்

மேலும் இது போல் ஒரு திட்டம் மத்திய அரசு அறிவிக்கவில்லை

யாரோ இது போல் பொய்யான செய்தி தயார் செய்துள்ளார்கள்

ஆண்டுதோறும் இந்த செய்தி சமூக வலைதளங்கலில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது. நாமும் இந்த செய்தியினை ஆண்டு தோறும் பொய் என்று சொல்லிகொண்டுதான் உள்ளோம்

மேலும் அதில் குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற உத்தரவு எண்ணும் போலியானது

இதில் உயர்நீதிமன்ற உத்தரவு எண் என்று குறிப்பிக்கப்பட்டிருப்பது கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு குறித்த உத்தரவுக்குரியது.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://lawyerschennai.nowfloats.com/m.fp/?&id=lawyerschennai&params=12&type=bizfloat2

அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.adminmedia.in/2017/12/blog-post_17.html

Tag: abdul kalam and vajapayee scholarship fake news

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. வதந்திகளின் முற்றுப் புள்ளியே வாழ்க.

    தொடர்ந்து பல சாதனைகளை படைக்க மற்றும் உங்கள் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete