'உல்லாசமாக இருக்கலாம் என பேஸ்புக்கில் விளம்பரம் வெளியிட்டு ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த பெண் - பணம் கொடுத்து ஏமாந்த வாலிபர்கள்...இளம்பெண் கைது
அட்மின் மீடியா
0
'உல்லாசமாக இருக்கலாம் என பேஸ்புக்கில் விளம்பரம் வெளியிட்டு ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த பெண் - பணம் கொடுத்து ஏமாந்த வாலிபர்கள்...இளம்பெண் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில், சமூக வலைதளங்களில் ஆபாச உரையாடல் மற்றும் உடலுறவுக்கு அழைப்பு விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்’ என ஆண்களிடம் ஆசைவார்த்தை கூறி பணம் பறித்த நபிலா பேகம் (27) என்ற பெண் கைது செய்யப்பட்டார். பேஸ்புக் ஐ.டி. மூலம் தனி ரேட் எனக் குறிப்பிட்டு பணம் வசூலித்து ஏமாற்றியதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
போலி சமூக வலைத்தள பக்கத்தில் பெண்களின் புகைப்படங்களை காட்டி உல்லாசமாக இருக்க பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைது... சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
facebook ID பயன்படுத்தி ஆபாச சாட்டிங் மற்றும் வயதிற்கு ஏற்ற பெண்கள் தனித்தனியாக ரேட் எனக் குறிப்பிட்டு ஆபாச உரையாடலுக்கும், உடலுறவுக்கும் அழைப்பு விடுத்து வாட்ஸ்அப் எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும்
அந்த எண்ணில் பேசும் பெண் ஒருவர் நீங்கள் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் ஆபாச வீடியோ கால் மற்றும் ஆபாச சேட்டிங் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி பலரும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின் IPS* அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
உத்தரவின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்து குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போலி Facebook ID மூலம் உல்லாசமாக இருக்கலாம் பணம் பறித்து ஏமாற்றிய ராமநாதபுரம் பரமக்குடி பகுதியை சேர்ந்த முகமது ஷாஜகான் என்பவரது மகள் நபிலா பேகம் (27) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் படங்களைக் காட்டி பணம் வாங்கி, தொலைபேசி அழைப்புகளை புறக்கணிப்பது போன்ற ஆன்லைன் தொழில்முறை மோசடி நடந்து வருகிறது. இதனை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Tags: தமிழக செய்திகள்