வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு சட்டம் படித்த வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்
வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு சட்டம் படித்த வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை வருமான வரி மேல் முறையீட்டு நிர்ப்பாயம் (ITAT) அமர்வுகளில் பணியாற்றும் துறை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக, வருமான வரித்துறையில் இளம் நிபுணர்களை பணியமர்த்த சட்ட பட்டதாரிகள் /பட்டைய கணக்காளர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்:-
இளம் நிபுணர்கள்
வயது வரம்பு:-
விளம்பரத் தேதியின்படி, விண்ணப்பதாரின் வயது 35 வயதிற்கு மேல் இருக்க கூடாது.
சம்பளம்:-
மாதம் ரூ. 60,000 /-
இதுகுறித்த விரிவான விளம்பரம், கல்வித் தகுதிகள், பணிவிவரம், தேர்வு நடைமுறை, விண்ணப்பப் படிவம், கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தம் மற்றும் பிற விதிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுடன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://tnincometax.gov.in) உள்ளது
தகுதியுடைய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை https://tnincometax.gov.in/ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தேவையான தகவல்களுடன் பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம் மூடிய உரையில் 'APPLICATION FOR YP' என்று முன்பக்கத்தில் குறிப்பிடப்பட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் முகவரி:-
வருமான வரி துணை துணை ஆணையாளர் (தலைமை அலுவலகம்) (நிர்வாகம்) அறை எண் 110, முதல் தளம்,
முதன்மை தலைமைவருமான வரி ஆணையர் அலுவலகம்,
தமிழ்நாடு & புதுச்சேரி
121. M.G. சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை "APPLICATION FOR YP* என குறியிடப்பட்டு கீழ்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
chennai.doit.hq.admin@incometax.gov.in
Tags: வேலைவாய்ப்பு
