தாவரங்கள் சுவாசிப்பது எப்படி வீடியோ எடுத்த விஞ்ஞானிகள் வைரல் வீடியோ! Plants Breathe video
உலகில் முதன்முறையாக தாவரங்கள் சுவாசிப்பதை வீடியோ எடுத்த விஞ்ஞானிகள் வைரல் வீடியோ! Plants Breathe video
தாவரங்கள் மனிதர்களைப் போலவே சுவாசிக்கின்றன என்பது நாம் அறிந்ததே. ஆனால், அந்தச் சுவாசம் எவ்வாறு நிகழ்கிறது என்பதைத் தத்ரூபமாகப் படம்பிடித்துளார்கள் அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
தாவரங்கள் அவற்றின் இலைகளில் உள்ள சிறிய திறப்புகள் மூலம் "சுவாசிக்கின்றன" - இது ஸ்டோமாட்டா - கிரேக்க வார்த்தையான "வாய்கள்" என்பதிலிருந்து பெறப்பட்டது.
இந்த சிறிய துளைகள் ஒரு முக்கியமான சமநிலைப்படுத்தும் செயலைச் செய்கின்றன: அவை கார்பன் டை ஆக்சைடு (CO₂) ஒளிச்சேர்க்கைக்காக நுழைய அனுமதிக்க திறக்கின்றன, அதே நேரத்தில் நீராவி டிரான்ஸ்பிரேஷன் மூலம் வளிமண்டலத்தில் வெளியேற அனுமதிக்கிறது.
அதாவது தாவரங்களின் இலைகளில் நுண்துளைகள் உள்ளன. இவை 'ஸ்டோமாட்டா' (Stomata) அல்லது 'இலைத் துளைகள்' என்று அழைக்கப்படுகின்றன.
ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்சைடை (CO2) உறிஞ்சவும், அதே நேரத்தில் அதிகப்படியான நீரை நீராவியாக வெளியேற்றவும் (டிரான்ஸ்பிரேஷன்) இந்தத் துளைகள் பயன்படுகின்றன.மனிதனின் கண்கள் இமைப்பதைப் போலவே, இந்த இலைத் துளைகளும் குறிப்பிட்ட இடைவெளியில் திறந்து மூடுகின்றன. இதனைத்தான் விஞ்ஞானிகள் கான்ஃபோகல் மைக்ரோஸ்கோப்' மற்றும் படங்களைச் சீரமைக்கும் 'மெஷின் லேர்னிங்' மென்பொருள் மூலம் தற்போது வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/BrianRoemmele/status/2011801255530676636
Tags: தொழில்நுட்பம்
