Breaking News

கேரளாவில் ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டல் என வீடியோ வெளியிட்ட பெண் - பொய்யான குற்றச்சாட்டு என வேதனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் நடந்தது என்ன

அட்மின் மீடியா
0

கேரளாவில் ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டல் என வீடியோ வெளியிட்ட பெண் - பொய்யான குற்ற்ச்சாட்டு என வேதனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் நடந்தது என்ன



கேரளாவில் பேருந்து பயணத்தின் போது தன்னிடம் சில்மிஷம் செய்ததாக வீடியோ வெளியிட்ட இளம்பெண் - வேதனையில் உயிரை மாய்த்து கொண்ட இளைஞர் இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

ஆனால் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்

வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தீபக் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வீடியோவில் ஷிம்ஜிதா வேண்டுமென்றே தீபக்கின் அருகில் ஒட்டி நிற்பது போலவும், ஒரு சாதாரண மனிதனை உசுப்பேற்றி நெருங்கி நின்று, அதன் பிறகு நடக்கும் நிகழ்வை அவருக்கே தெரியாமல் படம்பிடித்தது போலவும், பாலியல் சீண்டல் செய்த குற்றவாளி என கேவலபடுத்தி பேசி சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியுள்ளார் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்


Tags: இந்திய செய்திகள் வேலைவாய்ப்பு வைரல் வீடியோ

Give Us Your Feedback