Breaking News

உடல் எடையை குறைக்க யூ-ட்யூப் பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு!

அட்மின் மீடியா
0

உடல் எடையை குறைக்க யூ-ட்யூப் பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு!


மதுரை மாநகர் செல்லூர் மீனாம்பாள்புரம் காமராஜர் குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த .

மதுரை செல்லூரைச் சேர்ந்த வேல்முருகன் (51) - விஜயலெட்சுமி தம்பதியினர் மகன், மகள் என இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர்.கட்டிட வேலை பார்த்துவரும் வேல்முருகன் தனது இளைய மகளான கலையரசியை  நரிமேடு பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியில் கலையரசி முதலாமாண்டு படித்துவந்துள்ளார் இந்நிலையில் தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று கலையரசி, யூடியூப்பில் உள்ள சில வீடியோக்களைப் பார்த்துள்ளார். அந்த வீடியோக்களில் சொல்லப்பட்ட ஆலோசனையின்படி, நாட்டு மருந்துக் கடையில் உடல் எடையைக் குறைப்பதற்காக ‘வெங்காரம்’ வாங்கி, அவற்றை யூ-ட்யூப் வீடியோவில் கூறியிருந்தப்படி உட்கொண்டுள்ளார்.

மருந்து சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அவருக்குக் கடும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கலையரசி உயிரிழந்தார். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மகளின் மரணம் குறித்துத் தந்தை வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் தந்தை வேல்முருகன், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுக்க வேண்டாம் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வரும் மருத்துவத் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல. முறையான மருத்துவப் படிப்பை முடிக்காதவர்கள் பகிரும் வீடியோக்களைப் பார்த்து மருந்துகளை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இதுபோன்ற youtube தளங்களை பார்த்து மருந்துகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback