Breaking News

FACT CHECK: சோழவரத்தில் துணி வாங்க சென்ற முஸ்லீம் பெண்கள் ? என்ற வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும்  சோலவரத்தில் பெருநாள் துணிகள் வாங்க சென்ற கடையில் ஊழியருக்கு கொரோனா  தொற்று‌‌ இருந்ததினால் முஸ்லீம் பெண்களை போலீஸ் அறஸ்ட் செய்து கூட்டி  செல்வதை  பார்த்தாவது திருந்துங்கள். என்று  ஒரு  வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அவர்கள் துணிக் கடைக்கும் செல்லவில்லை மேலும் அவர்கள் முஸ்லிம் பெண்களே கிடையாது

இந்த பெண்கள் அனைவரும் போலியான லட்டர் பேடை வைத்துக் கொண்டு தங்களை இஸ்லாமியர்கள் என்று காட்டுவதற்காக புர்கா போட்டுக்கொண்டு என் கணவர்  உடல் நலம் சரியில்லாமல் வீட்டிற்குள் இருக்கிறார் சாப்பாட்டுக்கு கூட வழியில்லை என்று கூறி பணம் வாங்க ஊர் ஊராகச் சுற்றி வசூல் செய்து வருகிறார்கள். 

கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம்  சோழவரத்தில் வசூல் செய்யும் போது அங்கு மாட்டிகொண்டு விட்டார்கள்  உடனே அங்கிருந்த மக்கள் காவல்துறையினரிடம் நடந்ததை கூறி புகார் செய்தனர்.அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றார்கள்



மேலும் அட்மின் மீடியா சோழவரம் காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து கேட்டபோது அந்த சம்பவம் பிப்ரவரி மாதம் நடந்தது என்றும் அவர்கள் புர்கா போட்டு ஏமாற்றியது உண்மைதான் என்று கூறினார்கள்

மேலும் இதையும் படியுங்க: இந்தியா சுதந்திரம் அடைந்தது புனித ரமலான் மாதத்திலா? உண்மை என்ன?.

அந்த செய்தியினை தற்போது பொய்யாக ஒரு கற்பனை கதை வைத்து ஷேர் செய்கின்றார்கள்.


சிந்திக்க மாட்டீர்களா இந்த புனித ரமலான் மாதத்தில் நல் அமல்கள் செய்ய்வும், அல் குர் ஆன் ஓதி நீங்கள் நன்மைகள் செய்ய வேண்டிய கைகளால் இப்படி கட்டுகதைகளையும் , வதந்தி பரப்புவதையும் செய்கின்றீர்களே இது நியாமா


என்ன பாய் இப்படி சொல்றீங்க எனக்கு ஒரு குரூபில் வந்தது நான் அதை ஷேர் செய்தேன் அவ்வளவுதான் என்று சொல்லாதீர்கள் . உங்களுக்கு வந்த செய்தியின் உண்மை தெரியாமல் நீங்கள் ஷேர் செய்வதும் தவறு என்று தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் இதையும் படியுங்க: ஊரடங்கில் அனைத்து இ பாஸ்களும் ஆன்லைனில் விண்ண்ப்பிபது எப்படி?..

எனவே உண்மை தன்மை தெரியாமல் எந்த விஷயத்தையும் உணர்ச்சிவசப்பட்டு பார்வேர்ட் செய்ய வேண்டாம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback