Breaking News

FACT CHECK: இந்தியா சுதந்திரம் அடைந்தது புனித ரமலான் மாதத்திலா? உண்மை என்ன?.

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் நாம் சுதந்திரம் பெற்றதே ரமலான் மாதத்தில் இது எத்தனை பேருக்கு தெரியும் என்று  ஒரு புகைப்படத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


இந்தியராய் பெருமையுடன் சொல்வோம் :ஆம்  உண்மை தான்

மேலும் படிக்க : இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு அட்மின் மீடியாவின் அனைத்து பாகங்களும் தொகுப்பு 


இந்திய நாட்டின் சுதந்திரம் இந்த புனித மாதத்தில் தான் கிடைத்தது என்பதில் சந்தேகமில்லை. ஆங்கில ஆண்டின் படி  1947 - ஆகஸ்ட்  15 என்பது ஹிஜ்ரி ஆண்டில் 1366 - ரமலான் மாதத்தில் 28 வது நோன்பு வெள்ளிக்கிழமை ஆகும்.



நம்மில் பலருக்கும்  நம்முடைய ஹிஜ்ரி ஆண்டு என்பது ரமலான் மாதத்தில் நோன்பு வைக்கவும் நோன்பு பெருநாள் தொழுகைக்கு பிறை பார்ப்பது மட்டுமே தெரியும். மற்ற அனைத்து தேவைகளையும் ஆங்கில ஆண்டில் தான் நியாபகம் வைத்துக் கொள்கிறோம்.  அதேபோல் இந்த விஷயத்திலும் ஹிஜ்ரி ஆண்டை விட்டு விட்டு ஆங்கில ஆண்டில் நாம் நியாபகம் வைத்துக் கொள்கிறோம்.

மேலும் இந்திய சுதந்திரத்திற்க்காக போராடியவர்களில் பெரும்பானமையானவர்கள் இஸ்லாமியர்கள் எனபதை நினைவு கொள்வோம்.
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் சுதந்திர போராட்டத்தில் நம்  இஸ்லாமியர்களின் பங்கு

இஸ்லாமியர்கள் இல்லை என்றால் சுதந்திரம் கிடைத்திருக்காது என்றுகூறினார்களே வரலாற்று அறிஞர்கள்  தெரியுமா உங்களுக்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர்.

அவர்களது மொத்த மக்கள் தொகையை  விட விடுதலைப் போரில் கொல்லப்பட்டவர்கள்  எண்ணிக்கை அதைவிட  அதிகமாகவே இருந்தது.
என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் கூறுகிறார். (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)

இந்தியா சுதந்திரம் பெற தன் இன்னுயிரையும் இழந்த லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களின் தியாகங்கள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்திய மண்ணின் விடுதலைக்கு இஸ்லாமியப் பெண்களும்  பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள் என்று தெரியுமா உங்களுக்கு

இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  சொல்லலாம் சொல்லலாம் சொல்லி கொண்டே இருக்கலாம் அத்தனை வீர வரலாறு உள்ளது.



உயிராலும், பொருளாலும் எண்ணற்ற தியாகங்கள் செய்து இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்துள்ளோம்.மனிதர்கள் அனைவரும் இறைவனுக்கு மட்டுமே அடிமைமனிதன் சக மனிதனுக்கு அடிமையாக்க கூடாது என்ற இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றிய அன்றைய இஸ்லாமிய சுதந்திர வீரர்கள் 

இந்திய மக்கள்  விடுதலைக்காக வீரத்துடன் பெரும் போர்களையும், தியாகங்களையும் சந்தித்துள்ளனர்.அந்த வீர வரலாற்றை அனைவருக்கும் தெரிவிப்பதே நம் நோக்கம்.இந்திய நாடு எங்கள் நாடு, நாங்கள் அந்நியரல்ல என்பதை நமது சகோதர சமுதாயத்தினரிடம் எடுத்துச் சொல்வோம். நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை திட்டமிட்டு  மறைத்து, 

மேலும் படிக்க : இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு அட்மின் மீடியாவின் அனைத்து பாகங்களும் தொகுப்பு 

இந்த நாட்டிலிருந்து நம்மை அந்நியப்படுத்த நினைக்கும் தீய சக்திகளுக்கு நம் தியாகத்தினை அடையாளம்  காட்டுவோம்.

அட்மின் மீடியாவின் ஆதாரம் 1



அட்மின் மீடியாவின் ஆதாரம் 2


அட்மின் மீடியாவின் ஆதாரம் 3


Tags: மறுப்பு செய்தி மார்க்க செய்தி முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback