Breaking News

FACT CHECK: கடைக்கு துணி வாங்க சென்ற முஸ்லீம் பெண்கள் நிலை என ஷேர் செய்யும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  முஸ்லீம் பெண்கள் கடைகளுக்குச் சென்று துணி மணிகள் மற்றும் ஏனைய பொருட்களை வாங்கும்போது அந்த கடை காவல் துறையால் மூடப்பட்ட பிறகு ஏற்பட்ட நிலைமைய பாருங்கள். துணி மணிகள் எடுக்க போக வேண்டாம் என்று சொன்னால் யாரும் கேட்பதில்லை. முஸ்லிம்களே இதை பார்த்தாவது உஷாராக இருப்போம்! என்று  ஒரு  வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம் 

அப்படியானால் உண்மை என்ன? 

அந்த சம்பவம் தற்போது நடந்தது இல்லை என்று தெரிந்தது ஏன் என்றால் யாரும் கொரானா பீதியால் முக கவசம் அணியவில்லை. எனவே பழைய வீடியோவாக இருக்கும் என்று தேடியதில்

இந்த சம்பவம் 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் நடந்தது. 


இந்த வீடியோ யார் கண்ணில் பட்டது என்று தெரியவில்லை உடனடியாக இது போன்ற தலைப்பை ரெடி செய்து விட்டார்கள் எனவே உண்மை தன்மை தெரியாமல் எந்த விஷயத்தையும் உணர்ச்சிவசப்பட்டு பார்வேர்ட் செய்ய வேண்டாம் 

அட்மின் மீடியா ஆதாரம்




அது கராச்சியில் நடந்த இடம் என்பத்ற்க்கான கூகுள்  ஆதாரம் 





எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback