Breaking News

பாரத் கேஸ் பயன்படுத்துபவர்கள் இனி வாட்ஸப்பில் சிலிண்டர் புக் செய்யலாம்: பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சமையல் கியாஸ் சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.



இந்தநிலையில் வாட்ஸ்அப்  மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறையை பாரத் கேஸ்  அறிமுகப்படுத்தியுள்ளது. 




இதற்க்கு நீங்கள் பாரத் பெட்ரோலியம் கேஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளராக  பதிவு செய்துள்ள செல்போன் எண்ணில் இருந்து தான் இந்த சேவை பெற முடியும்

  • முதலில் 1800224344 இந்த எண்ணை உங்கள் மொபைலில் சேவ் செய்து கொள்ளுங்கள்

  • அடுத்து வாட்ஸப்பில்  நீங்கள் அந்த எண்ணில் book என டைப் செய்தால் அதில் விவரம் வரும்

  • நீங்கள் சிலிண்டர் புக் செய்ய 1 டைப் செய்யுங்கள்

  • மேலும் உங்கள் சிலிண்டர்  புக்கிங்கை உறுதிப்படுத்த உங்கள் மொபைல் போனுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும். 

  • மேலும் நீங்கள் ஆன்லைனில்  கட்டணம் செலுத்துவதற்கான லிங்க் அனுப்பப்படும் அதில் நீங்கள் உங்கள் சிண்டருக்கான  கட்டணத்தை செலுத்தலாம்.

  • அதில், எப்போது சிலிண்டர் கிடைக்கும் என்ற ட்ராக்கிங் வசதியும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback