Breaking News

சிலிண்டர் வாங்கும் போது எக்ஸ்பரி தேதி பார்த்து வாங்குங்க

அட்மின் மீடியா
0
நம் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர்களுக்கு எக்ஸ்பைரி தேதி உள்ளது.

என்ன ஆச்சர்யமாக உள்ளதா ஆம் எதற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம், காலாவதியாகும் காலம் என்று உண்டல்லவா? அதுபோலத்தான் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கலனின் ஆயுட்காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கும்.

அது சிலிண்டரின் உடல் பகுதியையும், மேல் கழுத்து பகுதியையும் இணைக்கும் இடத்தில் உள்ள மெட்டல் ஸ்டிரிப் ஏதாவது ஒன்றில், உட்புறமாக, A,B,C,D என்ற ஏதேனும் ஒரு எழுத்தில் , ஏதாவது ஒரு எண்ணுடன் சேர்க்கப்பட்டு, பெயிண்டில் எழுதப்பட்டிருக்கும். அது புரிந்து கொள்ளும் முறை. 

  • A என்பது ஜனவரி, பிப்ரவரி, மார்ச்  முதல் காலாண்டை குறிக்கும்
  • B என்பது ஏப்ரல், மே ,ஜூன்  இரண்டாம் காலாண்டை குறிக்கும்
  • C என்பது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்  மூன்றாம் காலாண்டை குறிக்கும்
  • D என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர்  நான்காம் காலாண்டை குறிக்கும்

அதில் உள்ள எண்கள் - வருடத்தை குறிக்கும்.  EX: A-18 என்றால் ஜனவரி, 2018 கழித்து அந்த சிலிண்டரை நாம் உபயோகிக்கக் கூடாது என்று அர்த்தம்.
எனவே கேஸ் சிலிண்டர் வாங்கும் போது Expiry date- ஐ சரி பார்த்துக் கொள்ளவும். எதுவும் வருமுன் காப்பதே சிறந்ததல்லவா.

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback