வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்: தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது!முழு விவரம் Bank employees' strike: Banks will remain closed for 5 consecutive days!
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு : தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது! Bank employees' strike: Banks will remain closed for 5 consecutive days!
வருகிற செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் வருகிற செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிச் சேவைகள் நிறுத்தப்படவுள்ளது.நாடு முழுவதுமுள்ள வங்கி ஊழியர்கள் செப். 26, 27 வார இறுதி நாள்களைத் தொடர்ந்து வரும் செப். 28, 29, 30 ஆகிய 3 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
வாரத்தில் 5 நாட்கள் வேலை நாளாக அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய பலன்களை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் 85,000 வங்கி கிளைகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.SBI, Union Bank உள்ளிட்ட வங்கிகளும் முக்கியமான வங்கிப் பணிகளை வேலைநிறுத்தத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
Tags: தமிழக செய்திகள்
