Breaking News

சிலிண்டர் டெலவரி செய்ய டிப்ஸ் கேட்கின்றார்களா ? புகார் அளிக்கலாம் இண்டேன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இன்டேன் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தின்போது ரசீதில் உள்ள தொகைக்கு அதிகமாக, டிப்ஸ் வழங்க வேண்டாம் என்று இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.


மேலும் நீங்கள் அளிக்கும் பில் தொகை என்பது  வாடிக்கையாளரின் சமையலறை வரை கொண்டு வந்து வழங்குவதற்கான தொகையே ஆகும். வாடிக்கையாளா்கள் ரசீதில் உள்ள தொகைக்கு  மேல் டெலிவரி செய்பவா்களுக்கு பணம் ஏதும் கொடுக்கத் தேவையில்லை. 

விநியோகம் செய்பவா்களுக்கு டிப்ஸ் வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுவனம் என்றுமே ஆதரிப்பதில்லை. எனவே ரசீதில் உள்ள சில்லறை விலைக்கு மேல் யாரேனும் கேட்டால், வாடிக்கையாளா் சேவை மையத்தை 0422-2247396 என்ற எண்ணில் காலை 9.30 முதல் மாலை 5.15 வரை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

அதேபோல, விபத்து, கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண்ணையும், இதர புகாா்களுக்கு 18002333555 என்ற இலவச தொடா்பு எண்ணையும் தொடா்பு கொள்ளலாம்

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback