கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை கூடாது !புதிய சிக்கல்..மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா தெரபி பலன் அளிக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுக்க பல நாடுகளில் பிளாஸ்மா தெரபி பயன்படுத்தப்பட்டது. பல நாடுகளில் இந்த பிளாஸ்மா தெரபி பெரிய அளவில் பலன் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்கலுக்கு முன்பு டெல்லியில் கொரானா பாத்தித்த ஒருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்து அவர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்ட்டார்
இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா தெரபி பலன் அளிக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளாஸ்மா தெரபி என்பது தற்போது சோதனை கட்டத்தில் மட்டுமே இருக்கிறது. இந்த சிகிச்சை முறை கொரோனாவிற்கு எதிராக பலன் அளிக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. பிளாஸ்மா சிகிச்சை குறித்த கூடுதல் ஆய்வு தேவையப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. அந்த ஆராய்ச்சிகளை செய்து அதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் எனவும் பிளாஸ்மா சிகிச்சை உட்பட கொரோனாவிற்கென இதுவரை அங்கீகரிக்கப்பட்ட எந்த சிகிச்சை முறையும் கிடையாது என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
Source:
Tags: முக்கிய அறிவிப்பு
