Breaking News

பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன? அதன் மூலம் கொரானாவினை குணப்படுத்தமுடியுமா?

அட்மின் மீடியா
0
கொரானாவினை தடுக்க பல நாடுகள் அதற்கான தடுப்பு மருந்தினை தயாரிக்க ஆராய்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள் அதில் முதல் கட்ட முயற்ச்சியில் வெற்றி அடைந்துள்ளார்கள் ஆனால் அவை நடைமுறைக்கு வர காலதாமதம் ஏற்படலாம். ஆகையால் மார்றுவழியாக பல நாடுகளில் பிளாஸ்மா சிகிச்சையினை பயன் படுத்த துவங்கி விட்டார்கள்



பிளாஸ்மா  என்றால் என்ன

நம் உடலில் பிளாஸ்மா என்னும் திரவத்தில் தான் இரத்த அணுக்கள் மிதக்கின்றன. நம் ரத்தத்தில் பிளாஸ்மா என்பது திரவம். இது 55% உள்ளது. ரத்த செல்கள் 40% உள்ளன. பிளாஸ்மாவில் ஆல்புமின், பைரினோஜென், குளோப்லின் எனும் 3 முக்கிய புரதப்பொருட்கள் உள்ளன. 



ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கிய கூறுகளையும் இந்த பிளாஸ்மா தான்  வைத்துள்ளது. 

நம் உடம்பிற்குள் பாக்டிரியாஅல்லது வைரஸினால் நாம் பாதிக்கபட்டால்  அதை தோற்கடிப்பதற்காக நமது பிளாஸ்மாவில் இயற்கையாகவே ஆன்டிபாடிகள் உருவாகுகின்றன. 



இந்த ஆண்டிபாடிகள் நோய்க்கிருமிகளை தோற்கடிக்கும் அதில்  சில இரத்த அணுக்கள் நினைவக உயிரணுக்களாக செயல்படுகின்றன. இதன் விளைவாக, அதே வகையான நோய்க்கிருமிகள் பிற்காலத்தில் வரும் போது, நோய்க் கிருமிகள் அடையாளப்படுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்திகள் விரைவாக உருவாக்கப்பட்டுகின்றது.


பிளாஸ்மா  சிகிச்சை என்றால் என்ன

கொரானா வந்து அந்த நோய்த்தொற்றிலிருந்து மீண்டவா்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து அநத பிளாஸ்மாவை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் செலுத்துவதே பிளாஸ்மா சிகிச்சையாகும்

முன்பே  சொன்னது போல் உடலில் ஏற்படும் நோய்களை எதிா்த்துப் போராடும் அந்த பிளாஸ்மாவில் உள்ள ஆன்டிபாடிகள்  நோய்த்தொற்றை எதிா்த்துப் போராட ஆரம்பிக்கும். அதன் மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைவார்கள் இச்­சி­கிச்சை முறைக்கு நல்ல பலன் கிடைப்­ப­தா­கக் கூறப்ப­டு­கிறது. 



மேலும் வழக்கமாக ரத்த குருப்புகளின்  அடிப்படையிலேயே ஒருவா் உடலில் இருந்து மற்றொருவா் உடலுக்கு ரத்தத்தை செலுத்த முடியும். ஆனால், பிளாஸ்மாவை செலுத்துவதற்கு அதுபோன்ற தடைகள் எதுவும் இல்லை. நோய்த்தொற்றிலிருந்து மீண்டவா்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை எவருடைய உடலிலும் செலுத்தலாம் இதற்க்கு ரத்தகுருப் தடையில்லை

இந்த பிளாஸ்மா சிகிச்சைக்கு  ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்ப நிறுவனத்திற்க்கு  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது

இதன் மூலம் நாட்டிலேயே கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையை வழங்க இருக்கும் முதல் மாநிலமாக கேரளம் உருவெடுத்துள்ளது.


மேலும் பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளிக்கலாம் என  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநரும் தெரிவித்துள்ளார்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback